பேட்டிங்கில் 'வெறி'.. டிரஸ்ஸிங்கில் 'தெறி'.. இது நம்ம கோஹ்லி!
டெல்லி: ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அதிர வைத்த விராத் கோஹ்லி இப்போது பிரபல ஜிக்யூ மேகஸினின் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.
இது ஒரு பேஷன் டிசைனிங் இதழாகும். அதில் 50 சிறந்த டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ள ஆடவர்கள் வரிசையில் கோஹ்லியையும் சேர்த்து அவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் 50 பெஸ்ட்ட் டிரஸ்ஸிங் ஆண்கள் என்ற பட்டியலை இந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கோஹ்லிக்கும் இடம் கிடைத்துள்ளது.
இந்த இதழின் அட்டைப் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள கோஹ்லி, லவ் தி கவர். பெரிய பாராட்டு என்று கூறி பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோஹ்லி டிரஸ்ஸிங்கில் அதிக கவனம் செலுத்துபவர். நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வருவதை விரும்புபவர் என்பது குறிப்பிடத்தக்து.
Story first published: Friday, June 3, 2016, 18:04 [IST]
Other articles published on Jun 3, 2016


Click it and Unblock the Notifications