Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பைக்கு ஒரு வாரம் கூட இல்ல.. மனைவியுடன் ஸ்கூட்டியில் கோலி ஜாலி ரெய்ட்.. வீடியோ இதோ

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பிரதான சுற்று தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.

இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறாத முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்காக தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்திய அணி நாளை மறுநாள் துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபார்மில் இல்லாத கோலி

ஃபார்மில் இல்லாத கோலி

இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத விராட் கோலி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு நிச்சயம் கோபம் அல்லது அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்பது கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் கேட்டு பாதாளத்திற்கு சென்று விட்டது.

அடிபாதாளத்திற்கு சரிந்த கோலி

அடிபாதாளத்திற்கு சரிந்த கோலி

முதல் முறையாக அவரது வாழ்க்கையில் டி20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களுக்கு மேல் விராட் கோலி சரிந்துள்ளார்.அந்த அளவுக்கு அவருடைய பேட்டிங் டி20 கிரிக்கெட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா,இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற பேச்சும் தற்போது அடிபட்டு வருகிறது. இதனால் விராட் கோலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.

மனைவியுடன் விதி உலா

மனைவியுடன் விதி உலா

இந்த நிலையில் விராட் கோலி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தீவிரப் பயிற்சி ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியானது.ஆனால் இன்று விராட் கோலியும் அவரது மனைவியும் மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் ஜாலியாக உலா வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளமும் மேடும் உள்ள அந்த சாலையில் இருவரும் ஹெல்மெட் அணிந்து வீதியில் உலா வந்தனர். கணவனும் மனைவியும் இணைந்து சாலையில் செல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

Recommended Video

IND vs PAK போட்டியில் India தோல்வி தான் காரணம் சொன்ன Sarfaraz Ahmad *Cricket
விளம்பரம் படபிடிப்பு

விளம்பரம் படபிடிப்பு

ஆம் தவறில்லை தான். ஆனால் அங்கு தான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. இருவரும் ஜாலியாக செல்வது தவறில்லை. ஆனால் இது அனைத்தும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் லட்சணம் இதுதானா என்று ரசிகர்கள் விராட் கோலியை பார்த்து சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, August 20, 2022, 22:24 [IST]
Other articles published on Aug 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+