வயது 19..! 19 நாட்கள்... 5 பதக்கங்கள்...! தங்க மங்கையை வாழ்த்திய கோலி, அனுஷ்கா ஜோடி
டெல்லி: 5 பதக்கங்களை அள்ளி வந்த இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாசுக்கு கோலி, அனுஷ்கா ஜோடி வாழ்த்து தெரிவித்துள்ளது.
அசாமை சேர்ந்த தடகள வீராங்கனையான ஹிமா தாஸ். 19 வயதே நிரம்பிய அவர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த 19 நாட்களில் இந்தியாவிற்காக 5 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்து உள்ளார். இந்த சாதனைகளால், திங் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் 19 வயதே ஆன இந்த அசாம் மாணவி ஹிமா தாஸ் தற்போது உலகநாடுகளையே தம்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து மழையில் ஹிமா தாஸ் தற்போது நனைந்து வருகிறார்.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிமா தாசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அந்த பதிவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
19 நாட்களில் 5 தங்கப் பதக்கங்கள் வென்ற நீங்கள் ஒரு தங்க மங்கை.. உங்களுக்கு பாராட்டுக்கள். சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணம் என்று கோலி பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஹிமா தாஸ, நன்றி அனுஷ்கா.. நான் உங்கள் தீவிர ரசிகை என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications