For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியுடன் “அந்த” நடிகை.. அச்சச்சோ.. இணையத்தை ஆட்டம் காண வைத்த புகைப்படம்.. உண்மை என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் பிரபல ஆபாச பட நடிகை கேன்ட்ரா லஸ்ட் ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவிய இந்தப் புகைப்படம் குறித்த உண்மைத் தன்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று நடிகை கேன்ட்ரா லஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விராட் கோலியுடன் நெருக்கமாக நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், "விராட் கோலி ஒரு மிகச்சிறந்த உத்வேகம் அளிப்பவர் மற்றும் மிகவும் எளிமையான மனிதர்" என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். அத்துடன் "மக்கள் சாம்பியன்" என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

Virat Kohli and Kendra Lust Photo The Truth Behind the AI-Generated Image Fans reaction
Photo Credit: AI generated

பார்ப்பதற்கு மிகவும் இயல்பாக, இருவரும் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்டது போலவே அந்தப் புகைப்படம் இருந்ததால், ரசிகர்கள் பலரும் இது உண்மை என்றே நம்பிவிட்டனர். சில மணி நேரங்களிலேயே இந்தப் பதிவு 3.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைக் குவித்தது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதே சமயம், கமெண்ட் பகுதியில் பலரும் வேடிக்கையாகவும், கிண்டலாகவும் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர். சிலர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை மையமாக வைத்து, "அனுஷ்கா அண்ணி இதைப் பார்த்தால் என்ன ஆவது?" என்று கிண்டலடித்தனர். சிலர் மட்டும், "கோலி எப்போது இவரைச் சந்தித்தார்?" எனச் சந்தேகத்தை எழுப்பினர்.

உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் விவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இந்தப் புகைப்படம் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் படமாகும்.

கேன்ட்ரா லஸ்ட் இதுபோன்ற வேடிக்கையான AI புகைப்படங்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோருடன் நிற்பது போன்ற போலியான படங்களை உருவாக்கிப் பதிவிட்டுள்ளார். அதே பாணியில்தான் தற்போது விராட் கோலியின் படத்தையும் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

கோலி எங்கே இருக்கிறார்?

உண்மையில், விராட் கோலி தற்போது இந்தியாவில்தான் இருக்கிறார். நாளை (ஜனவரி 11) தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதும், கேன்ட்ரா லஸ்ட்டை சந்திக்கவே இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. நவீன AI தொழில்நுட்பம் எந்த அளவிற்கு உண்மையான புகைப்படங்களைப் போலவே போலிகளை உருவாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு சாட்சியாக அமைந்துள்ளது.

Story first published: Saturday, January 10, 2026, 12:12 [IST]
Other articles published on Jan 10, 2026
English summary
Virat Kohli and Kendra Lust Photo: The Truth Behind the AI-Generated Image; Fans reaction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+