Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தூரில் கோலி வைத்திருக்கும் மாஸ் ரெக்கார்ட்.. ஆனால் முதலிடம் பிடித்தவருக்கு அணியிலே இடமில்லை

இந்தூர் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற அட்டவணை அமைக்கப்பட்ட போது முதலில் இந்தூர் சேர்க்கப்படவில்லை.

பிறகு நிர்வாக வசதிக்காக இந்தப் போட்டி இயற்கை கொஞ்சும் தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இரு அணி வீரர்களுக்கும் கொஞ்சம் நிம்மதியே தரலாம்.

காரணம், 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானத்திலேயே, இந்துர் தான் ஒரு அளவிற்கு பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகும். இது இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கும் நல்ல செய்தி தான்.

ஆடுகளம்

ஆடுகளம்

ஏனென்றால் ரோகித், அக்சர் பட்டேல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தவிர , இந்த டெஸ்ட் தொடரில் யாரும் பெரியதாக சாதிக்கவில்லை. இதன் காரணமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் டெல்லி டெஸ்டில் விராட் கோலி பார்ம்க்கு வரும் சிங்னலை காட்டினார். தற்போது, மீண்டும் கோலி தன்னுடைய சிம்மாசனத்திற்கு வர ஏற்ற இடம் எது என்று கேட்டால் அது இந்தூர் தான்.

கோலி ரெக்கார்ட்

கோலி ரெக்கார்ட்

இந்தூரில் சர்வதேச டெஸ்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்றால் அது விராட் கோலி தான். மொத்தமாக 2 டெஸ்டில் விளையாடி உள்ள கோலி 3 இன்னிங்சில் 228 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரே இன்னிங்சில் 211 ரன்கள் ஆகும். சராசரி 76ஆகும். மற்ற ஆடுகளத்தை வி இங்கு பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

பார்ம்க்கு வரலாம்

பார்ம்க்கு வரலாம்

இதனால் பந்து பேட்டிற்கு நன்கு வரும். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் எந்த நெருக்கடியும் இன்றி விளையாட முடியம். ஆஸ்திரேலிய வீரர்கள் கூட இங்கு தங்களுக்கு பிடித்த ஸ்விப் ஷாட்டுகளை இங்கு தைரியமாக ஆடலாம். இந்த மைதானத்தில் புஜாரா கூட சதம் அடித்து இருக்கிறார். இதனால் 3வது டெஸ்ட் 3 நாட்களில் முடிந்து விடாமல், ஒரு 4, 5 நாள் போகும் என எதிர்பார்க்கலாம்.

2 இந்திய வீரர்கள்

2 இந்திய வீரர்கள்

எனினும் இங்கு கோலியை விட இரண்டு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். ஆனால் இருவருமே தற்போதைய தொடரில் இந்திய அணியில் இல்லை. மாயங் அகர்வால் இங்கு விளையாடிய ஒரே டெஸ்டில் 243 ரன்கள் விளாசினார். ஆனால் நமது கேஎல் ராகுல் இருப்பதால் அகர்வாலுக்கு இடமில்லை. இதே போன்று இங்கு 3 இன்னிங்சில் 297 ரன்கள் அடித்த ரஹானேவும் தற்போது அணியில் இல்லை என்பது கொஞ்சம் வேதனை தான்.

Story first published: Friday, February 24, 2023, 22:53 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+