Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை சதம் விளாசிய கோலி.. டி20 தரவரிசையில் கிடுகிடுவென முன்னேற்றம்..இந்திய வீரர்களுக்கு உயர்வு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசினார்.

கோலி முன்னேற்றம்

கோலி முன்னேற்றம்

இதன் மூலம் விராட் கோலி டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் சிங்கப் பாய்ச்சலை பாய்ந்துள்ளார். தற்போது அவர் 14 இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை பிடித்துள்ளார்.இதேபோன்று கே எல் ராகுல் ஆப்கானிஸ்தான் எதிராக அரை சதம் விளாசியசதன் மூலம் 30வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்தியா தற்போது தொடர்ந்து டி20 போட்டியில் விளையாடுவதால் கோலி மீண்டும் டாப் 5 இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

இதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் டாப் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.11-வது இடத்தில் இருந்த அவர் நான்கு இடங்களில் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். தமிழக வீரர் அஸ்வின் 9 இடங்கள் முன்னேறி தற்போது 41வது இடத்தை பிடித்துள்ளார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

இதேபோன்று அக்சர் பட்டேல் 14 இடங்கள் முன்னேறி 57வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் 55 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பையை இலங்கை வெல்ல காரணமாக இருந்த பனுகா ராஜபக்சா t20 தர வரிசையில் உயர்வைக் கண்டுள்ளார்.

ஹசரங்கா

ஹசரங்கா

இறுதிப்போட்டியில் 45 பந்துகளில் 71 ரன்கள் விளாசிய அவர் தற்போது பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறி தற்போது 68 ஆவது இடத்தில் இருந்து 34வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று இலங்கை வீரர் ஹசரங்கா பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹசரங்கா 7 இடங்கள் முன்னேறி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஹசரங்கா 28 இடங்கள் முன்னேறி 152 வது இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, September 14, 2022, 20:09 [IST]
Other articles published on Sep 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+