Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி விசிட்.. பூரித்து போன ஸ்காட்லாந்து டிரெஸ்சிங் ரூம்.. வைரலாகும் படங்கள்

துபாய்: மைதானத்தில் படுதோல்வி அடைந்து, ஸ்காட்லாந்து வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் முகத்தை தொங்க போட்டுக் கொண்டிருந்தபோது அங்கே இந்திய அணி கேப்டன் விராட் கோலி சென்றுள்ளார்.

Recommended Video

India Team ட்ரெஸ்ஸிங் பெரிய ரூமில் குழப்பம் இருக்கு - முன்னாள் வீரர் சொன்ன தகவல்

இந்த புகைப்படங்களை ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

விராட் கோலி நடுவில் நின்று எதையோ சொல்லிக் கொண்டிருக்கும் போது, ​​ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கைகளை கட்டியபடி கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதடுகளில் மெல்லிய புன்னகையும், முகத்தில் நிதானமும் அங்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்ல போதுமானதாக இருக்கிறது.

ஸ்காட்லாந்து வீரர்கள்

ஸ்காட்லாந்து வீரர்கள்

விராட் மற்றும் ரோஹித் பேசிக் கொண்டிருந்த போது, ​​அனைத்து வீரர்களும் அமைதியாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் ஸ்காட்லாந்து கிரிக்கெட்டின் ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. அதில் விராட், உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்றும் அழைப்பர். நேற்று ஸ்காட்லாந்து டிரெஸ்சிங் ரூமிலும் அதுதான் நடந்துள்ளது. ஸ்காட்லாந்து வீரர்களுக்கு தனது அனுபவத்தை ஷேர் செய்துள்ளார் கிங் கோலி. நேரம் ஒதுக்கிய கோலி மற்றும் சீனியர் வீரர்களுக்கு ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியமும் நன்றி தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையையடுத்து இந்திய வீரர்கள் அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

விராட் பிறந்த நாள்

விராட் பிறந்த நாள்

களத்தில் ஒரு அணி வெற்றி பெற்றால் மற்றைய அணி தோல்வியடைவது உறுதி. ஆனால் மைதானத்திற்கு வெளியே வெற்றி தோல்வியை எடுத்துச் செல்லக் கூடாது. அதை கோலி அணி நேற்றுச் செய்துள்ளது. இது கேப்டன் கோலியின் பிறந்தநாள் என்பதாலும் இது ஸ்பெஷல் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவும் டாஸ் வென்று நிர்ணயிக்கப்பட்ட பந்துகளுக்குள் ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கான போட்டியில் இன்னும் தாங்கள் இருக்கிறோம் என்பதை செய்து காட்டியிருந்தது.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

முதலில் ஜடேஜாவும் ஷமியும் தங்கள் பந்துவீச்சில் அணியின் வேலையை எளிதாக்கினர், பின்னர் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் வெளுத்து வாங்கியதால், இந்தியா எளிதாக வென்றது. முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியை வெறும் 85 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டி வீசினர்.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

81 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நமது பேட்ஸ்மேன்கள் 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 6, 2021, 18:49 [IST]
Other articles published on Nov 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+