Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ ? புஜாரா, கோலி அடுத்தடுத்து வீழ்த்திய முர்ஃபி.. ரசிகர்கள் ஏமாற்றம்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்ளுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைதம் அடித்தார்.

ஆனால் வழக்கம் போல் கேஎல் ராகுல் பொறமையாக விளையாடி என்று சொல்வதை விட ரன் சேர்க்க திணறி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அஸ்வின்

அஸ்வின்

இதனையடுத்து 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி77 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் களமிறங்கியது. அஸ்வின் பொறுப்பாக விளையாடி ரோகித்துக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதில் அஸ்வின் 2 பவுண்டரிகளை அடித்து 62 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் முர்ஃபி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

புஜாரா

புஜாரா

இதனையடுத்து புஜாரா பேட்டிங் செய்ய வந்தார். ரஞ்சி போட்டியில் விளையாடி புஜாரா நல்ல பார்மில் இருந்தார். இதனால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எந்த நெருக்கடியும் இன்றி விளையாடி வந்த புஜாரா , தேவையில்லாமல் ஸ்விப் ஷாட் ஆடி கேட்ச் ஆனார்.

விராட் கோலி

விராட் கோலி

இதனை தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களத்திற்கு வந்தார். அப்போது விராட் கோலியும் நல்ல பார்மில் இருந்து 2 பவுண்டரிகளை அடித்தார். இதனையடுத்து மதிய உணவுக்கு பிறகு வந்த விராட் கோலி, தேவையில்லாமல் இடது புறம் சென்ற பந்தை அடிக்க முயன்றார். இதனை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அபாரமாக கேட்ச் பிடித்தார்.

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

இதன் மூலம் விராட் கோலி 12 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் தடுமாறி வருகிறது. இந்தியா இழந்த 4 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் முர்ஃபி தான் கைப்பற்றி அசத்தினார். இதில் முர்ஃபி கட்டுக்கோப்பாக பந்துவீசினார் என்பது உண்மையாக இருந்தாலும், விராட் கோலி, புஜாரா ஆகியோர் மோசமான ஷாட் ஆடியதே அவர்கள் ஆட்டமிழந்ததற்கு காரணமாக அமைந்தது.

Story first published: Friday, February 10, 2023, 13:33 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+