விராட் கோலி, புஜாரா படைக்க உள்ள புதிய பேட்டிங் சாதனை.. விவரம் இதோ..??
ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்கில் நாளை நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜோகனஸ்பர்கில் விராட் கோலி, புஜாரா ஆகியோர் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளனர்
ஜோகனஸ்பர்க்கில் இது வரை இந்தியா தோற்றதே இல்லை. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற விராட் கோலிக்கு (310) இன்னும் 7 ரன்களே தேவை, தற்போது அந்த பெருமையை நியூசிலாந்து வீரர் ஜான் ரெட், (316) பெற்றுள்ளார்.
இதே போன்று மற்றொரு அனுபவ வீரரான புஜாரா ஜோகனஸ்பர்கில் இதுவரை 229 ரன்கள் குவித்துள்ளார். புஜாரா ஒரு சதம் விளாசினால், அவர் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. புஜாராவுக்கு முன் அந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேமியன் மார்டின் (255), ரிக்கி பாண்டிங் (263), ராகுல் டிராவிட் (262) ஆகியோர் உள்ளனர்.
Recommended Video
இந்திய வீரர்கள் புஜாரா, கோலி ஆகியோர் ஃபார்மில் இல்லாமல் தவித்து வரும் நிலையில், இருவருக்கும் ஜோகனஸ்பர்க் ராசியான மைதானமாகவே உள்ளது. இதனால் இருவரும் ஃபார்ம்க்கு திரும்பி இந்தியாவுக்கு வெற்றி பெற்று தர இது நல்ல வாய்ப்பாக அமையும். சொல்ல முடியாது, விராட் கோலி தனது 71வது சதத்தை பெற்று தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை


Click it and Unblock the Notifications