Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுந்தரை வைத்து பிராக்டீஸ்... டெஸ்ட் போட்டிக்காக கேப்டனின் வேற லெவல் திட்டம்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 17ம் தேதி முதல் அடிலெய்டில் துவங்கவுள்ளது.

இதற்கென இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களை சிறப்பான வகையில் தயார்படுத்தி வருகின்றன.

கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றதை தொடர இந்தியா தீவிரமாக உள்ளது.

17ம் தேதி துவக்கம்

17ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்கவுள்ளது. முதலில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிறப்பான வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

நாடு திரும்பும் விராட் கோலி

நாடு திரும்பும் விராட் கோலி

முன்னதாக நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முறையே ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு விராட் கோலி நாடு திரும்பவுள்ளார்.

செயல்படுத்தும் விராட்

செயல்படுத்தும் விராட்

வெளிநாட்டில் நடைபெறும் இந்த பகலிரவு போட்டியில் முதல்முறையாக இந்தியா பங்கேற்கவுள்ளது. இதையடுத்து இதற்கென பிரத்யேகமான திட்டங்களை கேப்டன் விராட் கோலி வகுத்து அதை பயிற்சிகளில் செயல்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ளும்வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பான நெட் பயிற்சி

சிறப்பான நெட் பயிற்சி

ஆஸ்திரேலிய பௌலர் நாதன் லியோனின் பந்தை எதிர்கொள்ளும்வகையில் வாஷிங்டன் சுந்தரின் பௌலிங்கை கொண்டு, விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியாளர் ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் சுந்தருக்கு தமிழில் கட்டளைகளை பிறப்பித்து பௌலிங் செய்ய வைத்தார்.

Story first published: Monday, December 14, 2020, 14:42 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+