
பந்துவீச்சாளர் பட்டியல்
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரசன் 859 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 841 இடத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதைப் போன்று பும்ரா நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாத நிலையில் ஒரு இடம் பின்தங்கி ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளார். இதேபோன்று கடைசி டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ஜடேஜா ஒரு இடம் சரிந்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

கோலி முன்னேற்றம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1205 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். 186 ரன்கள் விளாசிய அவர் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஏழு இடங்கள் முன்னேறி தற்போது 13 வது இடத்தில் உள்ளார். இதேபோன்று ரிஷப் பண்ட் ஒன்பதாவது இடத்திலும் கேப்டன் ரோகித் சர்மா பத்தாவது இடத்திலும் இருக்கிறார். நடப்பு தொடரில் பேட்டிங்கில் 264 ரன்கள் விளாசிய அக்சர் பட்டேல் எட்டு இடங்கள் முன்னேறி தற்போது 44வது இடத்தில் இருக்கிறார்.

ஆஸி வீரர்கள் முன்னேற்றம்
இதேபோன்று இந்தியாவுக்கு எதிரான தொடரில் 333 அடித்த ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேமிரான் கிரீன் 11 இடங்கள் முன்னேறி பேட்டிங் தரவரிசை பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளார். இதேபோன்று இடது கை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 853 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணி
4 ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 119 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்று இருந்தால் அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தில் பிடித்து அசத்தியிருக்கலாம். தற்போது ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றால் மட்டுமே முதல் இடத்தை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











