Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரணகளத்துலயும் குதூகலம்... குளத்துல விளையாட்டு.. குத்தாட்டம் போட்ட கோலி.. பாட்டு பாடிய சஹல்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சூப்பர் ஓவரில் கலக்கல் ஆட்டம் போட்டு வெற்றி பெற்ற ஆர்சிபி அணியினர், அடுத்ததாக தங்களது என்டர்டெயின்மெண்டை நோக்கி சென்றுள்ளனர்.

குளத்தில் வாலிபால் ஆட்டம் போட்ட ஆர்சிபி அணியினர் அடுத்ததாக பாட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்று தங்களை குஷி படுத்திக் கொண்டுள்ளனர்.

அடுத்ததாக அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் வரும் 3ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொள்ளவுள்ளது.

த்ரில் சூப்பர் ஓவர்

த்ரில் சூப்பர் ஓவர்

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் தொடரின் இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 ரன்களுக்கு சுருட்டிய ஆர்சிபி, சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

வெற்றியை உறுதிசெய்த சைனி

வெற்றியை உறுதிசெய்த சைனி

போட்டியில் 201 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி அணியை அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, போட்டியை டிரா செய்த நிலையில், இந்த தொடரின் இரண்டாவது சூப்பர் ஓவர் இந்த போட்டியில் விளையாடப்பட்டது. இதில் பந்துவீசிய நவ்தீப் சைனி, 7 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை சுருக்கி ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தார்.

வாலிபால்.. பாட்டு நிகழ்ச்சி

இந்நிலையில் இந்த பரபரப்பான சூப்பர் ஓவர் வெற்றியை அடுத்து தங்களது என்டர்டெயின்மெண்டிற்கும் நேரம் ஒதுக்கியுள்ளனர் ஆர்சிபி அணியினர். குளத்தில் வாலிபால் விளையாடியும், பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றும் அவர்கள் தங்களை குஷியாக்கியுள்ளனர். இதில் கோலி குத்தாட்டம் போட்டும், சஹல் பாட்டு பாடியும் சிறப்பாக என்ஜாய் செய்தனர். இந்த வீடியோவை ஆர்சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

3ம் தேதி போட்டி

3ம் தேதி போட்டி

அடுத்ததாக அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் வரும் 3ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி இந்த போட்டியிலும் தொடர்ந்து வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 30, 2020, 18:46 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+