Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்துக்கு எதிராக கோலி, ரோகித்தின் ரெக்கார்ட்ஸ்.. செய்கை தொடருமா? தயாராகும் இந்திய அணி

டாக்கா : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது.இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று வங்கதேசம் சென்று அடைந்தது.

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பங்கேற்கும் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சுலபமான காரியமாக இருக்காது இதனால் இந்திய அணி பலமான வீரர்களை வங்கதேசத்திற்கு அனுப்பி உள்ளது.

கடும் பயிற்சி

கடும் பயிற்சி

வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால், டஸ்கின் அகமது ஆகியோர் காயம் காரணமாக ஒரு நாள் தொடரிலிருந்து விலகி உள்ளனர். இது வங்கதேசத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. முதலில் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் செயல்பாடு ரசிகர்களிடையே அவ்வளவாக திருப்தியை தரவில்லை. இதனால் இழந்த பெருமையை மீட்கும் வகையில் ரோகித் சர்மா மும்பையில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வங்கதேச தொடர் தொடருக்காக சிறப்பாக தயாராகி இருக்கிறார்.

ரோகித் vs வங்கதேசம்

ரோகித் vs வங்கதேசம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிராக ரோகித் சர்மாவின் ரெக்கார்ட்ஸ் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இதுவரை வங்கதேசத்துக்கு எதிராக 13 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் 660 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் மூன்று சதங்களும், இரண்டு அரை சதங்களும் அடங்கும். வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் சர்மா 3 சதங்கள்,2 அரைசதங்கள் அடித்திருக்கிறார். அதாவது சராசரியாக ஒரு போட்டிக்கு 60 ரன்களை ரோகித் சர்மா சேரத்திருக்கிறார். இதனால் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா வங்கதேசத்திற்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விராட் கோலி vs வங்கதேசம்

விராட் கோலி vs வங்கதேசம்

இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அந்த அணிக்கு எதிராக 12 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி 680 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்களும் மூன்று அரை சங்கங்களும் அடங்கும். வங்கதேசத்துக்கு எதிராக அதிகபட்சமாக 130 ரன்களை விராட் கோலி அடித்திருக்கிறார். இதில் ஒரு போட்டியில் சராசரியாக 75 ரன்கள் விராட் கோலி அடித்திருக்கிறார்.

ஏற்கனவே டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது அதே பார்மை வங்கதேசத்துக்கு எதிராக அவர் வெளிப்படுத்தினால் பல சாதனைகள் உருவாக்க வாய்ப்பு உள்ளது.

முன்பே தொடக்கம்

முன்பே தொடக்கம்

இதனிடையே நியூசிலாந்தில் மழை பாதிப்பால் பெரும்பாலான போட்டிகள் நடைபெறாமல் ரசிகர்கள் செம கடுப்பாகி இருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல செய்தி அளிக்கும் விதமாக வங்கதேசத்தின் வானிலை அறிக்கை இருக்கிறது. கொஞ்சம் கூட மழை எட்டிப் பார்க்க வாய்ப்பு இல்லை. எனினும் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் போட்டி மதியம் ஒரு மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தொடங்குகிறது.

Story first published: Friday, December 2, 2022, 20:35 [IST]
Other articles published on Dec 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+