For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். வீரருக்கு இவ்வளவு நல்ல மனசா.. கோலியை ஆச்சரியப்படுத்திய ஷாகின் ஆஃப்ரிடி.. நண்பர்களான எதிரிகள்

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் களத்தில் விளையாடினாலே களத்தில் ஆக்கோரஷம்க்கு பஞ்சமிருக்காது.

Recommended Video

Asia Cup 2022: India ஏன் Win பண்ண முடியும்? | Aanee's Appeal

காரணம், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சனை தான். அண்டை நாடுகளை எதிரி நாடாக பாவிக்கும் அரசியல் இரு நாட்டிலும் உள்ளது.

ஆனால், இந்த எதிரி நாடுகளை தற்போது கிரிக்கெட் என்ற விளையாட்டு நண்பர்களாக்கி விட்டது என்ற சொன்னால் உங்களால நம்ப முடிகிறதா?

காயம்

WWE வில் உள்ள வீரர்கள் அனைவரும் நண்பர்களே. ஆனால் களத்தில் அவர்கள் எதிரிகள் போல் நமக்கு காட்டப்படுகிறார்கள். அதே போல் ஒரு காட்சி தான் தற்போது கிரிக்கெட்டிலும் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷாகின் ஆப்ரிடி இம்முறை காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை.

நலம் விசாரிப்பு

இந்த நிலையில், உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபடுவதற்காக ஷாகின் ஆப்ரிடியும் பாகிஸ்தான் அணியுடன் துபாய்க்கு வந்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஆப்ரிடி, எல்லைக் கோட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இந்திய வீரர் சாஹல், ஆப்ரிடியை பார்த்து நலம் விசாரித்து சென்றார்.

கோலியுடன் சந்திப்பு

கோலியுடன் சந்திப்பு

இதன் பிறகு, அங்கிருந்து வந்த விராட் கோலி, ஷாகின் ஆப்ரிடியை பார்த்து கால் எப்படி இருக்கிறது, மருத்துவர் என்ன சொல்லி இருக்காங்க என்று நலம் விசாரித்தார். அதற்கு உலகக் கோப்பை தொடர் வரை ஒய்வில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்று சொன்ன ஷாகின் ஆப்ரடி, திடீரென்று ஒரு வார்த்தை கூற, கோலி அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

நெகிழ்ச்சியில் கோலி

நெகிழ்ச்சியில் கோலி

நீங்கள் ஆசிய கோப்பையில் பழைய படி விளையாட வேண்டும். அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று ஷாயின் ஆப்ரிடி கூற, விராட் கோலி நெகிழ்ச்சி அடைந்தார். இதற்கு கோலி நன்றி தெரிவித்து கொண்டார். இதன் பின்னர் கேஎல் ராகுலும் ஷாயின் ஆப்ரிடியை வந்து நலம் விசாரித்து சென்றார். இந்த காட்சி இரு நாட்டு ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, August 26, 2022, 18:59 [IST]
Other articles published on Aug 26, 2022
English summary
Virat kohli and Shaheen afridi exchanging greetings ahead of ind vs Pak clash பாக். வீரருக்கு இவ்வளவு நல்ல மனசா.. கோலியை ஆச்சரியப்படுத்திய ஷாகின் ஆஃப்ரிடி.. நண்பர்களான எதிரிகள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+