For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை பொறுத்தவரைக்கும் விராட், ஸ்டீவ் தான் பெஸ்ட்... கேன் வில்லியம்சனோட பணிவை பாருங்க!

வெல்லிங்டன் : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்திற்கு தாவியுள்ளார்.

கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அவரது இரட்டை சதம் உள்ளிட்டவை அவரை முதலிடத்தில் அமர்த்தியுள்ளது.

இந்நிலையில் தன்னை பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி தான் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன்கள் என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

முதலிடத்தில் கேன் வில்லியம்சன்

முதலிடத்தில் கேன் வில்லியம்சன்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2020ன் இறுதி பட்டியல் இதுவாக உள்ள நிலையில், இதில் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இரட்டை சதம் அடித்த வில்லியம்சன்

இரட்டை சதம் அடித்த வில்லியம்சன்

நியூசிலாந்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடினார். குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதத்தை கடந்தார். இதேபோல பாகிஸ்தானுக்கு எதிராகவும் ரன்களை விளாசினார்.

சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித்

சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித்

இதையடுத்து தற்போது முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார். விராட் கோலி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆச்சர்யமாக உள்ளது

ஆச்சர்யமாக உள்ளது

இதனிடையே, தன்னை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தான் சிறப்பான ஆட்டக்காரர்கள் என்றும் ஆயினும் தான் முதலிடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளதாகவும் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

விளையாடுவது அதிர்ஷ்டம்

விளையாடுவது அதிர்ஷ்டம்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலியின் பேட்டிங் அனைத்து வடிவங்களிலும் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றமடைந்துக் கொண்டே செல்வதாகவும் கேன் வில்லியம்சன் மேலும் கூறினார். அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு எதிராக விளையாடுவதை அதிர்ஷ்டமாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 31, 2020, 17:32 [IST]
Other articles published on Dec 31, 2020
English summary
Really fortunate to play against Smith & Virat -Kane Williamson
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+