Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய மைல்கல்லை நெருங்கும் கோலி.. கடைசி வாய்ப்பில் சாதிப்பாரா? இந்திய அணி முதலிடம் பிடிக்க வாய்ப்பு

அகமதாபாத் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் முழுவதும் பெரிய ஸ்கோர் அடிக்காத விராட் கோலி கடைசி டெஸ்டில் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கடந்த 15 இன்னிங்ஸ்களாகவே விராட் கோலி ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வேதனை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.

கோலி மைல்கல்

கோலி மைல்கல்

கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நவம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு சதம் அடித்த விராட் கோலி 3 ஆண்டுகளாக இதுவரை மூன்று இலக்கம் ரன்களை தொடவில்லை. இந்த நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடியுள்ள விராட் கோலி, நாளை தனது 50-வது டெஸ்டில் களமிறங்குகிறார்.

52 ரன்கள்

52 ரன்கள்

இதுவரை இந்திய மண்ணில் 3958 ரன்கள் அடித்திருக்கும் கோலி சராசரியாக 58 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 13 சதங்களும் 12 அரை சதங்களும் அடங்கும். இதனால் 50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மேலும் விராட் கோலி 52 ரன்கள் சேர்த்தால் சொந்த மண்ணில் நான்காயிரம் ரன்கள் தொட்ட வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

நடுவரிசை

நடுவரிசை

ஏற்கனவே கே எல் ராகுல் சரிவர விளையாடவில்லை என்று அவரை அணியை விட்டு தூக்கிய நிலையில் அந்த வரிசையில் விராட் கோலி இணைந்து விடுவாரோ என்ற அச்சத்தில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நடுவரிசை வீரர்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். பல காலங்களாக இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் எவ்வித பங்களிப்பையும் அணிக்கு கொடுப்பதில்லை. புஜாரா ஏதேனும் ஒரு போட்டியில் அரைசிதம் அடித்து விட்டு அத்துடன் நின்று விடுகிறார்.

முதலிடம் பிடிக்க வாய்ப்பு

முதலிடம் பிடிக்க வாய்ப்பு

இதனால் புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து பெரிய இலக்கை தொட்டால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி வீழ்த்த முடியும். இல்லையெனில் ஆஸ்திரேலிய கையே ஓங்கி இருக்கும். இதனிடையே கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதோடு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும்.

Story first published: Wednesday, March 8, 2023, 22:42 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+