Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய சம்பவம் செய்த விராட் கோலி.. ஆடி போன ரசிகர்கள்.. இரக்கமே இனி கிடையாது போல

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி தற்போது பெரிய சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டிலேயே தற்போது பணக்கார வீரராக வலம் வருபவர் விராட் கோலி.

பல வணிக நிறுவனங்களை நடத்தி வரும் விராட் கோலி சமூக வலைத்தளம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வலம் வந்தது.

Virat kohli angry response over fake news about farm house

ஆனால் இதற்கு விராட் கோலி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து எது போட்டாலும் மக்கள் படிப்பார்கள் என்று எண்ணிய ஒரு செய்தி நிறுவனம் விராட் கோலி ஒரு பெரிய பங்களாவை மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கி இருப்பதாகவும் அங்கு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

இதனை பலரும் நம்பி இருந்த நிலையில் அது குறித்து விராட் கோலி கோபம் அடைந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் உடனடியாக பதிவு ஒன்றைப் போட்ட விராட் கோலி தம் சிறுவயதிலிருந்து படிக்கும் ஒரு செய்தித்தாளில் இப்படி பொய் செய்தி வெளியிடுவார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று போட்டிருந்தார்.

Virat kohli angry response over fake news about farm house

தற்போது இந்தப் பதிவை கோலி ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து பார்த்தியா என் தலைவனை எவ்வளவு பெரிய சம்பவம் செய்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்த விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் பயிற்சி செய்ய இருக்கிறார்.

இதில் ஒரு வாரம் பங்கேற்ற பிறகு நேரடியாக இலங்கைக்கு இந்திய அணியுடன் செல்ல இருக்கிறார். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் விராட் கோலி தங்களுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி உலக கோப்பையில் வெல்ல ஓரளவுக்காவது வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, August 15, 2023, 21:12 [IST]
Other articles published on Aug 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+