Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப நாளைக்கு பிறகு கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா பொது இடத்தில் மீட்டிங்.. ரசிகர்கள் உற்சாகம்

பானாஜி: வெகு நாட்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் பொது இடத்தில் சந்தித்துக் கொண்டனர். இதை ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி ரொம்பவே பிசியாக இருந்தார். இதன்பிறகு ஒருநாள் தொடரில் அவரே துணை கேப்டன் என்பதால் அப்போதும், பிசி. போலவே, அனுஷ்காவும், ஏ தில் ஹை முஸ்கில் திரைப்பட புரமோஷன் வேலைகளில் மும்முரமாக இருந்தார். எனவே காதலர்களால் சந்திக்க முடியவில்லை.

Virat Kohli and Anushka Sharma are back

இந்நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவாவில் வைத்து நடைபெற்ற அம்மாநில கால்பந்தாட்ட அணி மற்றும் டெல்லி அணிகளுக்கு நடுவேயான போட்டியை ஸ்டேடியத்தில் வைத்து காதலர்கள் இணைந்து பார்த்து ரசித்தனர். பெரிய திரையில் காதலர்களை காண்பித்ததும், ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் உற்சாக கரகோசங்களை எழுப்பினர்.

கோவாவிற்கு இருவரும் சப்போர்ட் செய்தனர். ஆனால் அப்போட்டியில் டெல்லி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 1, 2016, 10:21 [IST]
Other articles published on Nov 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+