Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி - அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Recommended Video

குட்டி அனுஷ்கா பொறந்தாச்சு... குஷியில் விராட் கோலி!

தங்களுக்கு குழந்தை பிறந்ததை விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அனுஷ்கா சர்மாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

மேலும், இந்த நேரத்தில் தங்களின் தனிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கோரி உள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

விராட் கோலி, தன் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்து இருந்தார். அப்போதே அவருக்கு வாழ்த்து குவிந்து இருந்தது. அதன் பின் அவர் ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்றார்.

இந்தியா திரும்பினார்

இந்தியா திரும்பினார்

அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கலாம் என்பதால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் இந்தியா திரும்பிய அவர் அனுஷ்காவுடன் தங்கி இருந்தார்.

நேரம்

நேரம்

இந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி அன்று மதிய நேரத்தில் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுஷ்கா சர்மாவும், குழந்தையும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாழ்த்து

வாழ்த்து

விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Monday, January 11, 2021, 17:08 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+