Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அவுட்.. அடுத்து திருப்பூர் காலி.. சட்டை இல்லாமல் மனைவியுடன் செல்பி.. கோலியால் சூடான ட்விட்டர்!

Recommended Video

Watch Video : Virat kohli releases shirtless photo goes viral

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி சட்டை அணியாமல், தன் மனைவி அனுஷ்கா சர்மா மேல் சாய்ந்து கொண்டு எடுத்த செல்பி புகைப்படம் ட்விட்டரில் காட்டுத்தீயாக பரவி சூட்டை கிளப்பி வருகிறது.

மறுபுறம் சிலர் கோலி சட்டை அணியாததை வைத்து செமயாக கலாய்த்தும் வருகிறார்கள். இந்தியாவின் டெக்ஸ்டைல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.

என்ன புகைப்படம்?

ட்விட்டரில் ஒரு செல்பி புகைப்படத்தை பதிவிட்டு, ஒரே ஒரு "ஹார்ட்டின்" ஈமோஜி மட்டுமே போட்டு இருந்தார் விராட் கோலி. அந்த புகைப்படமே கதை பேசும் என்பதால், எந்த வாசகமும் எழுதவில்லை. அந்த புகைப்படத்தில் தன் மனைவி அனுஷ்கா சர்மா மேல் அவர் சாய்ந்து கொண்டு இருந்தார்.

என்ன ஸ்பெஷல்?

என்ன ஸ்பெஷல்?

அந்தப் புகைப்படத்தில் அனுஷ்கா பிகினி உடையில் இருக்க, அவர் மேல் சட்டை அணியாத நிலையில் கோலி சாய்ந்து இருந்தார். அனுஷ்கா கன்னத்தில் கை வைத்து வித்தியாசமாக ஒரு போஸ் கொடுத்து இருந்தார்.

காதலின் அடையாளம்

பார்த்த உடன் ரொமான்ஸ் கிளப்பும் இந்த புகைப்படம் உடனடியாக இணையத்தில் வேகமாக வலம் வந்தது. சில மணி நேரங்களில் 50,000 லைக்குகளை அள்ளியது. பலரும் கோலி - அனுஷ்கா காதலின் அடையாளம் என கூறி இருந்தனர்.

சிக்கினார் கோலி

சிக்கினார் கோலி

எனினும், சிலர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைய இது தான் காரணம் என சம்பந்தம் இல்லாமல் கூறியதாக கிண்டல் செய்து வரும் நேரத்தில் கோலி சட்டை போடாமல் வந்து அவர்களிடம் சிக்கினார்.

டெக்ஸ்டைல் அவுட்

விராட் கோலி உடை அணிவதில்லை. அதனால், தான் டெக்ஸ்டைல் தொழில் வீழ்ந்து விட்டது. அரசை குறை சொல்வதை நிறுத்துங்கள் என சிலர் கேலி செய்ய துவங்கி உள்ளனர். ஒரே கல்லில் கோலி, நிதி அமைச்சர் என இருவரையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

தோனியின் சாதனை காலி

தோனியின் சாதனை காலி

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போடிட்களிலும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிகளின் மூலம் கேப்டனாக தோனியின் அதிக டெஸ்ட் போட்டி வெற்றி என்ற சாதனையை முறியடித்து இருந்தார் கோலி.

அடுத்து திருப்பூர்

அடுத்து திருப்பூர்

தோனியின் சாதனையை காலி செய்து விட்டு மனைவி மேல் சாய்ந்து போஸ் கொடுத்த கோலி, சட்டை போடாமல், டெக்ஸ்டைல் தொழிலை காலி செய்து திருப்பூரையும் அவுட் ஆக்கப் போகிறார். நாட்டு நடப்பு அப்படி தான் இருக்கிறது.

Story first published: Wednesday, September 11, 2019, 15:45 [IST]
Other articles published on Sep 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+