Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு போட்டோ.. கோலி சொன்ன குட் நியூஸ்.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. கோடிக்கணக்கில் குவிந்த லைக்ஸ்!

மும்பை : விராட் கோலி சொன்ன நல்ல செய்திக்கு லைக்ஸ்-ஐ குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Recommended Video

Bravoவின் 500 Wickets சாதனை; T20ல் வரலாறு | OneIndia Tamil

விராட் கோலி - அனுஷ்கா சர்மா விரைவில் பெற்றோராக உள்ளனர். ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் இந்த செய்தியை வெளியிட்ட நொடி முதல் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் அதிக ரசிகர்களை கொண்ட பிரபலங்கள். இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இருவரும் 2015இல் காதலிப்பதாக செய்திகள் வந்தது முதல் அந்த ஜோடிக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. 2018இல் அவர்கள் திருமணம் செய்து கொண்ட போது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த ஜோடி ரசிகர்களுக்கு நல்ல செய்தி கூறி உள்ளது.

பதிவு

பதிவு

ஆம், இருவரும் பெற்றோராக இருப்பதை சமூக வலைதளங்கள் மூலம் இருவரும் அறிவித்தனர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் ஒரே மாதிரி பதிவை பகிர்ந்தனர். கூடவே கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் கோலி நிற்கும் புகைப்படமும் பகிரப்பட்டது.

மூன்று பேராகி விடுவோம்

மூன்று பேராகி விடுவோம்

அவர்கள் தங்கள் பதிவில் ஜனவரி 2021இல் தாங்கள் மூன்று பேராகி விடுவோம் என கூறி உள்ளனர். அந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்-ஐ குவித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பதிவிட்ட இரண்டு மணி நேரத்தில் 60 லட்சம் லைக்குகள் குவிந்தது.

1 கோடி லைக்குகள்

1 கோடி லைக்குகள்

அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 30 லட்சம் லைக்குகள் குவிந்தன. நான்கு மணி நேரத்தில் இருவரது பதிவிற்கும் சேர்த்து 1 கோடி லைக்குகளை தாண்டியது. ட்விட்டரில் ரசிகர்கள் மீம்ஸ் போட்டும், வாழ்த்தியும் வருகிறார்கள்.

வாழ்த்து

வாழ்த்து

கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என பலரும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். கோலி தற்போது 2020 ஐபிஎல் தொடரில் ஆட ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 27, 2020, 17:22 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+