கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா தம்பதிகளுக்கு நடுவே புதிதாக ஒரு க்யூட் ஜீவன்!
Recommended Video

மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா ஷர்மா இருவருக்கும் நடுவே அழகான புதிய ஜீவன் ஒன்று வந்துள்ளது.
கன்ங்க்ராட்ஸ் சொல்ல தயாராகும் முன்பாக, மேட்டரை படித்து விடுங்கள்.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய இளம் பெண்களின் கனவு கண்ணன் கோஹ்லிக்கும், இளைஞர்களின் கனவு கன்னி அனுஷ்கா ஷர்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதன்பிறகு இருவரும் தங்களது ஃபுரபொஷனில் குறியாக இருந்தபோதிலும், ஹேப்பி மொமண்ட்டுகளை தவற விடுவதில்லை.

இன்ஸ்டாகிராம்
நாட்டு இளைய சமூகத்தின், ஆதர்ஷ தம்பதிகளாக மாறிவிட்ட கோஹ்லி-அனுஷ்கா தம்பதிகள் என்ன செய்தாலும் அதை உற்று நோக்குகிறார்கள். இந்த நிலையில்தான், இன்று இந்த இளம் ஜோடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் ஷேர் செய்துள்ளது.

பல லட்சம் லைக்ஸ்
கோஹ்லி மற்றும் அனுஷ்கா இருவருமே கையில் ஒரு க்யூட் நாய் குட்டியை தூக்கி வைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அதில் ஹார்ட் எமோஜி போடப்பட்டுள்ளது. வெளியிட்ட 15 மணி நேரத்திலேயே 21 லட்சத்திற்கும் அதிக லைக்ஸ்களை வாங்கி குவித்தது இந்த போஸ்ட்.

அனுஷ்காவுடன் உடல் பயிற்சி
முன்னதாக, அனுஷ்காவுடன் கோஹ்லி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டிருந்தார் கோஹ்லி. இணைந்து உடற்பயிற்சி செய்வது இன்னும் பெட்டராக்கும் என கூறியதோடு, அனுஷ்காவை பாஸ் என கூறியிருந்தார்.

மெழுகு சிலை
டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் கோஹ்லியின் தத்ரூப மெழுகு சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் மூலம் கபில் தேவ், டேவிட் பெக்காம், லியானல் மெஸ்சி, உசைன் போல்ட் ஆகியோர் வரிசையில் மியூசியத்தில் இடம் பிடித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோஹ்லி இணைந்தார்.


Click it and Unblock the Notifications