Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50 சதவீதம் ஷாப்பிங்... இந்த கவர்ச்சி விளம்பரம் மல்டி மில்லியனர்களையும் விட்டு வைக்கலை போலும்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் கேப்டவுனில் 50 சதவீத தள்ளுபடியில் ஷாப்பிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மறைமுகமாக காதலித்துவிட்டு ஓராண்டுக்கு மேல் இல்லை இல்லை என்றே கூறி வந்த விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணமும் இத்தாலியில் ஒரு ரசகிய இடத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு நாட்டில் தேனிலவு கொண்டாடினர். பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் மும்பையிலும், டெல்லியிலும் திருமண வரவேற்புகளை கொடுத்தனர்.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இதைத் தொடர்ந்து புத்தாண்டை கொண்டாட இருவரும் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு அந்த அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விராத் கலந்து கொள்ளவுள்ளார்.

டுவிட்டரில் புகைப்படம்

டுவிட்டரில் புகைப்படம்

இந்நிலையில் இருவரும் கடற்கரையை ரசித்த படி ஊரை சுற்றி பார்த்து வருகின்றனர். அந்த படத்தை கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷாப்பிங் அனுபவம்

ஷாப்பிங் அனுபவம்

அதேபோல் கேப்டவுனில் 50 சதவீதம் தள்ளுபடி என்று ஆஃபர் வழங்கும் ஒரு கடையில் இருவரும் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளன.

அனுஷ்கா சர்மா வருமானம்

விராத் கோஹ்லி ஆண்டுக்கு 7 மில்லியனும், அனுஷ்கா சர்மா ஆண்டுக்கு 3.5 மில்லியனும் வருமானமாக ஈட்டி வரும் நிலையிலும் இவர்கள் ஆஃபர் விலையில் ஷாப்பிங் செய்வதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Story first published: Thursday, January 4, 2018, 14:55 [IST]
Other articles published on Jan 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+