Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜனவரியில் நாங்க 3 பேர் ஆயிடுவோம்.. கோலி - அனுஷ்கா அறிவிப்பு.. குட்டிப் பையன் தைமூர் தான் பாவம்!

மும்பை : விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜனவரி மாதம் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியான தகவலை கூறி உள்ளனர்.

அவர்கள் அறிவிப்பை வெளியிட்ட அந்த நொடியில் இருந்து சமூக வலைதளங்கள் திக்கித் திணறி வருகின்றன.

பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், சிலர் கோலியை கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக சிலர் சையிப் அலி கான் - கரீனா கபூர் ஜோடியின் மகனான தைமூர் அலி கானை கிண்டல் செய்து வருகின்றனர்.

செலப்ரிட்டி ஜோடி

செலப்ரிட்டி ஜோடி

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட செலப்ரிட்டி ஜோடி என்றால் அது விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி தான். அவர்களுக்கு முன் சையிப் அலி கான் - கரீனா கபூர் ஜோடி பிரபலமாக இருந்தது. அவர்கள் இருவரும் பாலிவுட் நடிகர்கள் என்பதால் வட மாநிலங்களில் அவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருந்தது.

தைமூர் அலி கான்

தைமூர் அலி கான்

அவர்களது முதல் குழந்தை தான் தைமூர் அலி கான். அந்த சுட்டிப் பையன் என்ன செய்தாலும் கடந்த சில ஆண்டுகளில் அது முக்கிய செய்தியாக இருந்து வந்தது. மீடியாக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தான் தைமூர். ஆனால், தற்போது அவனின் புகழ் மங்கி வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

வரிசையாக அறிவிப்பு

வரிசையாக அறிவிப்பு

சையிப் அலி கான் - கரீனா கபூர் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். அது ஒருபுறம் இருக்க, தற்போது விராட் கோலி அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்க உள்ளதை அறிவித்து உள்ளனர்.

தைமூர் கண்ணீர்

தைமூர் கண்ணீர்

கோலி - அனுஷ்கா சர்மா குழந்தை வந்து விட்டால் தைமூரை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்களாம். அதை அறிந்து குட்டிப் பையன் தைமூர் இப்போது கண்ணீர் விட்டு அழுது வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து உள்ளனர்.

பாண்டியாவை சேஸ் செய்த கோலி

பாண்டியாவை சேஸ் செய்த கோலி

அது மட்டுமின்றி, சிலர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தந்தையான நிலையில் விராட் கோலி அவரை கிரிக்கெட் போட்டி போல சேஸ் செய்து தற்போது தந்தையாக இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர் சில நெட்டிசன்கள்.

கோலி - அனுஷ்கா காதல் கதை

கோலி - அனுஷ்கா காதல் கதை

கோலி - அனுஷ்கா சர்மா காதல் கதையை சிலர் சிலாகித்தும் பேசி வருகின்றனர். 2015இல் ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின் இருவரும் டேட்டிங் சென்று காதலித்து வந்தனர். கோலி ஆடிய வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு அனுஷ்கா சர்மாவும் சென்றார்.

விருஷ்கா ரசிகர்கள்

விருஷ்கா ரசிகர்கள்

அதைத் தொடர்ந்து 2018இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது முதல் அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருவரையும் "விருஷ்கா" என ரசிகர்கள் அழைத்து வந்தனர். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சியில் உள்ளனர் அவர்களின் ரசிகர்கள்.

Story first published: Thursday, August 27, 2020, 12:52 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+