
தென்னாப்பிரிக்க டி20 தொடர்
அதன்படி ஐபிஎல் முடிந்த கையுடன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருடன் மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு கடற்கரை ஓரமாக அவர்கள் மூன்று பேரும் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது.

விராட் கோலி
இந்நிலையில் தான் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவில் இருந்து நேற்று ( ஜூன் 14 ) இந்தியா திரும்பிய விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி, அவசர அவசரமாக மும்பை கோகிலபென் மருத்துவமனைக்கு விரைந்தனர். நீண்ட நேரமாக மருத்துவமனைக்குள் இருந்த அவர்கள், வெளியேறும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

காய பாதிப்பு?
ஐபிஎல் தொடரின் போது விராட் கோலிக்கு எந்தவித காய பாதிப்புகளும் ஏற்படவில்லை. வரும் ஜூன் 16ம் தேதியன்று இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக புறப்படுகின்றனர். கோலியும் அவர்களுடன் தான் செல்கிறார். இப்படிபட்ட சூழலில் தான் விராட் கோலி மருத்துவமனை சென்று வந்துள்ளார்.
Recommended Video

என்ன காரணம்
இதனை கண்ட ரசிகர்கள், விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டது, அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல என்ன காரணம் என என்பது குறித்து குழப்பம் எழுந்துள்ளது. மோசமான பார்மில் உல்ள விராட் கோலி, அடுத்த போட்டியிலாவது சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications