Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்து பார்த்து அக்கறையாய்.. ஏர்போர்ட்டில்.. இது "டாடி" கோலி அவதாரம் - வைரல் ஃபோட்டோ

மும்பை: இந்திய அணி நேற்று நள்ளிரவு இங்கிலாந்து கிளம்பிய நிலையில், கேப்டன் விராட் கோலி தனது குடும்பத்துடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி தலா ஒரு போட்டி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து டூர் அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரஸ் மீட்

பிரஸ் மீட்

அதேசமயம், பெண்கள் அணியும் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் நேற்று நள்ளிரவு (ஜூன்.2) மும்பையில் இருந்து இன்று இங்கிலாந்து கிளம்பினார்கள். நேற்று மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பிரஸ் மீட்டில் கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசிய பிறகு, இரவு இங்கிலாந்துக்கு கிளம்பினர்.

 மீண்டும் குவாரண்டைன்

மீண்டும் குவாரண்டைன்

Bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, சார்ட்டர் விமானத்தில் இங்கிலாந்து கிளம்பியது. கையோடு பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை வீரர்கள் கொண்டு சென்றனர். இங்கிலாந்து வருவதற்கு முன்னர், இந்திய அணி மும்பையில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்தது. அப்போது வழக்கமான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்திலும் அவர்கள் நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 வைரல் ஃபோட்டோ

வைரல் ஃபோட்டோ

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இங்கிலாந்தில் செலவழிக்கவுள்ள இந்திய வீரர்கள், தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். அதன்படி, கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகா-வுடன் இங்கிலாந்து கிளம்பினார். மகளின் புகைப்படத்தை இதுவரை சமூக தளங்களில் வெளியிடாமல் மிக கவனமாக இருந்த விராட் கோலி, தனது குடும்பத்துடன் இங்கிலாந்து கிளம்பிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 பெற்றோராக முடிவு

பெற்றோராக முடிவு

கோலி கருப்பு ஜெர்ஸி அணிந்திருக்க, அனுஷ்காவும் கருப்பு உடையில் தனது மகளை அரவணைத்து தூக்கிச் சென்றார். சமீபத்தில், கோலி - அனுஷ்கா ஜோடியின் மகளான 'வாமிகா' பெயர் காரணம் குறித்தும், குழந்தையின் முகத்தை காட்டும்படியும் ரசிகர்கள் கோலியிடம் கேட்டிருந்தனர். முதலில் தனது மகளின் பெயருக்கு கோலி அர்த்தம் கூறினார். அதில், "துர்கை கடவுளின் மறுபெயர் வாமிகா" என்றார். அதேசமயம், மகளின் படத்தை காண்பிக்க அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர், "சோஷியல் மீடியா என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதை அவளது விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பு, எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று ஒரு பெற்றோர்களாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

Story first published: Thursday, June 3, 2021, 21:53 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+