Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கேப்டன் பதவியெல்லாம் கொடுக்க முடியாது” கோலியை கடுப்பேற்றிய பிசிசிஐ.. ஓய்வு முடிவுக்கு காரணம் என்ன?

மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பிசிசிஐ-யிடம் விராட் கோலி தனக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை வழங்குமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ அதற்கு மறுத்து உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இதுவரை ரோகித் சர்மாவே இருந்தார். ஆனால், கடைசியாக இந்திய அணி விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் படுமோசமான தோல்விகளே கிடைத்தது.

virat-kohli-asked-bcci-for-test-captaincy-before-retirement-decision-claims-emerge

மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் மோசமடைந்தது. அவர் 38 வயதை எட்டிவிட்டார். இந்த நிலையில், இனி ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப் போவதில்லைஎன பிசிசிஐ முடிவு எடுத்தது. இதை அறிந்த விராட் கோலி, அடுத்த டெஸ்ட் அணி கேப்டனை அடையாளம் காணும் வரை தான் தற்காலிகமாக இந்திய அணியின் கேப்டனாக இருக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இனி இந்திய அணிக்கு இளம் கேப்டனை தான் நியமிப்போம் என பிசிசிஐ நிர்வாகமும், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதியாக இருந்துள்ளனர். இதை அறிந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை.

விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என பிசிசிஐ எதிர்பார்த்தது. 2025 முதல் 2027 வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக விளையாடுவார் என இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு மாறான முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி ஓய்வு மன நிலையில் இருந்ததாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. எனினும், இந்திய அணி தற்போது சரியான கேப்டன் இல்லாமல் தடுமாறி வருவதை அறிந்து, அவர் தற்காலிகமாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதை பிசிசிஐ மறுத்துவிட்டது. தற்போது விராட் கோலி தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. அது குறித்து விராட் கோலி என்ன முடிவெடுக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

Story first published: Saturday, May 10, 2025, 15:30 [IST]
Other articles published on May 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+