Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீரின் ஈகோவை சீண்டிய கோலி.. உடனே பிசிசிஐயிடமிருந்து பறந்த உத்தரவு.. பழிவாங்கப்படும் கிங்

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி கம்பீரின் ஈகோவை விராட் கோலி சீண்டியதால், அவர் எதிர்வினை ஆற்றி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 93 ரன்கள் தான் அடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி, சதம் அடித்தாலும் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். அந்த தொடரில் மொத்தமாகவே விராட் கோலி 190 ரன்கள் தான் எடுத்தார்.

Virat kohli Ranji trophy delhi team

விராட் கோலி ஒரே மாதிரி ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ஆடி கேட்சானார். இதனால் விராட் கோலி மீது கடும் விமர்சனம் இருந்தது. இதனை அடுத்து மும்பையில் விராட் கோலி சஞ்சய் பங்கருடன் இணைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இது பல விமர்சனங்களை எழுப்பியது. டெல்லி அணிக்கு என தனியாக பயிற்சியாளர் இருக்கும்போது விராட் கோலி மட்டும் எப்படி தனியாக பயிற்சி செய்யலாம் என்று கேள்வி எழுந்தது.

அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் பயிற்சி குழு இருக்கும்போது விராட் கோலி அவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது. மேலும் இது கௌதம் கம்பீரின் ஈகோவை சீண்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கம்பீர், பிசிசிஐ இடம் புகார் அளித்ததை அடுத்து பிசிசிஐ தலையிட்டு அவரை டெல்லி அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.

எனினும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விராட் கோலி தமது பயிற்சியை முடித்து விட்டதாகவும் டெல்லி அணியில் இருக்கும் இளம் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய தாம் ஆர்வமாக இருப்பதாக கூறி டெல்லி அணி நடத்தும் பயிற்சி முகாமில் பங்கு பெற்றது மட்டுமில்லாமல் அங்கு இருந்த வீரர்களுடன் சிரித்து கால்பந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் விராட் கோலி இந்த போட்டியை விளையாடுவதால் பத்தாயிரம் ரசிகர்கள் திரள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென டெல்லி கிரிக்கெட் சங்கம் கேட்டு இருக்கிறது.

Story first published: Tuesday, January 28, 2025, 13:24 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+