Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கொஞ்சம் கூட ஏற்றுக்க முடியாது.. ரசிகர்களை கடுமையாக திட்டிய விராட் கோலி.. அப்படி என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ரசிகர்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் விராட் கோலியின் ஹோட்டலில் அவரது அறையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கோலியின் ஹோட்டல் அறை

கோலியின் ஹோட்டல் அறை

அதில் விராட் கோலி தன்னுடைய அறையை எப்படி சுத்தமாக வைத்து இருந்தார். மேலும் தனக்கு பிடித்த கடவுளின் சிலைகளையும் கோலி வைத்திருந்தார். இந்த வீடியோ கிங் கோலியின் ஹோட்டல் ரூம் என்று இணையதளத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த புகைப்படம் விராட் கோலி கவனத்திற்கு சென்றுள்ளது.

மதிக்கிறேன்

மதிக்கிறேன்

இதனால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி தன்னுடைய அனுமதி இல்லாமல் அறையில் புகைப்படம் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.

வேறு எங்கு கிடைக்கும்

வேறு எங்கு கிடைக்கும்

அதை நான் எப்போதும் வரவேற்பேன். ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும்.

ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்

ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்

இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என விராட் கோலி காட்டமாக பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சம்பவம்

தென்னாப்பிரிக்காவில் சம்பவம்

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா தொடரின் போது தன் குழந்தையை அனுமதி இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ எடுத்ததாக குற்றஞ்சாட்டி விராட் கோலி அதனை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தற்போது அவருடைய ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கோலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 31, 2022, 11:27 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+