Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1683 நாட்களுக்கு பிறகு விராட் கோலிக்கு சரிவு.. கிங் கோலிக்கு வந்த சோதனை.. என்ன நடந்தது?

பெங்களூரு: கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சரிவு ஒன்றை சந்தித்துள்ளார்.

இந்த சரிவை பற்றி விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அழுது, புலம்பி வருகின்றனர்,

இலங்கைக்கு எதிரான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

விராட் கோலி 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தான் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசினார். இதனால் பெங்களூருவில் மீண்டும் போட்டி நடைபெறுவதால் கோலி அது போன்று ஒரு சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாக இருந்ததால் கோலி முதல் இன்னிங்சில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் இதன் பின்னர் விராட் கோலி 2வது இன்னிங்சில் களமிறங்கினார். இம்முறையாவது அவர் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

குறைந்த சராசரி

குறைந்த சராசரி

முதல் இன்னிங்சில் எப்படி ஆட்டமிழந்தாரோ, அதே மாதிரியே 2வது இன்னிங்சிலும் பந்து பவுன்ஸ் ஆகாமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 50க்கு கீழ் சென்றது.கடைசியாக விராட் கோலி விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில் ஒரு முறை தான் அரைசதம் அவர் விளாசியுள்ளார்.

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் விரக்தி

இதனால் எப்போதும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்திலும் சராசரியை 50க்கு மேல் வைத்திருக்கும் ஒரே வீரர் என்று அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தற்போது டெஸ்ட்டில் அவர் சராசரி 50க்கு கீழ் சென்றது, கோலி ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Sunday, March 13, 2022, 20:22 [IST]
Other articles published on Mar 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+