மீண்டும் அதே ஆயுதமா??.. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பவுலிங்.. விராட் கோலி ரிட்டர்ன்ஸ்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

2வது போட்டி
முதல் ஒருநாள் போட்டியிலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்தது இந்திய அணி. எனவே இன்றைய போட்டியிலும் முதலில் பவுலிங் வீசும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முணைப்புடன் களமிறங்கியுள்ளது.

அணி மாற்றம்
இதற்கான ப்ளேயிங் 11 ஒரே ஒரு மாற்றம் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகிய அவர், 2வது போட்டியில் கம்பேக் கொடுப்பதற்காக காத்துள்ளார்.

சிக்கலில் கோலிக்கு
விராட் கோலியின் வருகையை அடுத்து இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மோசமான ஃபார்ம் காரணமாக கோலி ஒதுக்கப்படுகிறார் என்ற விமர்சனங்கள் உள்ளன. இப்படிபட்ட சூழலில் நல்ல ஃபார்மில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு கோலிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுவேந்திர சாஹல், பிரஷித் கிருஷ்ணா


Click it and Unblock the Notifications