Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

97 ரன்னுடன் களத்தில் நின்றபோது டிக்ளேர் செய்ய முயன்ற கோஹ்லி.. ரவி சாஸ்திரி என்ன சொன்னார் தெரியுமா?

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் செஞ்சுரி அடிக்கும் முன்பே டிக்ளேர் கேட்டு இருக்கிறார். இதற்காக அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அனுமதி கேட்டு உள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். இது அவரது 50 வது ஐசிசி செஞ்சுரி ஆகும். மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது.

Virat Kohli, batting on 97, asked Ravi Shastri about declare

இந்த போட்டி டிரா ஆகும் நிலையில் இருந்த காரணத்தால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை சீக்கிரம் முடித்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால் கோஹ்லி தான் 97 ரன்னில் இருக்கும் போது டிக்ளேர் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக கோஹ்லி ரவி சாஸ்திரியிடம் டிக்ளேர் செய்வது குறித்து ஆலோசனை கேட்டு இருக்கிறார். ஆனால் ரவி சாஸ்திரி கோஹ்லியிடம் இன்னும் இரண்டு ஓவர்கள் விளையாடும்படி கூறியுள்ளார். செஞ்சுரி அடித்த பின் டிக்ளேர் செய்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கோஹ்லியின் திறமையும், பெருந்தன்மையும் பாராட்டிய ரவி சாஸ்திரி ''வானமே அவருக்கு எல்லை'' என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 21, 2017, 17:33 [IST]
Other articles published on Nov 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+