For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிகம் கூகுள் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் டோணி அல்ல கோஹ்லியாம்!

By Siva

மும்பை: இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் டோணியை விராத் கோஹ்லி முந்தியுள்ளார்.

கூகுள் நிறுவனம் இணையதளத்தில் கடந்த 30 நாட்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் என்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி என்பது தெரிய வந்துள்ளது.

கோஹ்லி டோணியை விட பிரபலமாக உள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து டோணி கடைசி நேரத்தில் விலகியதும், கோஹ்லி கேப்டனாக சதம் அடித்ததும் தான் அவர் இணையதளத்தில் அதிக தேடப்பட காரணம்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், விராத் கோஹ்லிக்கும் காதல் என்று அண்மை காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த காதல் விவகாரமும் கோஹ்லியை பலர் கூகுள் செய்ய காரணம்.

டோணி

டோணி

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்தது தான் டோணி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வர காரணம்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி யுவராஜ் சிங்கை ரூ.14 கோடி கொடுத்து வாங்கியது. இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகும்.

சச்சின்

சச்சின்

சச்சின் டெண்டுல்கர் என்ன தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூகுளில் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரராக தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவாக், ரெய்னா

சேவாக், ரெய்னா

வீரேந்திர சேவாக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

கடந்த ஆண்டு டோணியைக் காட்டிலும் கோஹ்லி அதிக விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 5, 2014, 14:34 [IST]
Other articles published on May 5, 2014
English summary
A series of losses overseas for Team India saw skipper Mahendra Singh Dhoni's popularity taking a hit on internet and Virat Kohli's fan following rising. A study by search engine Google showed that Dhoni's last minute withdrawal from the Asia Cup and Kohli's century as a captain has impacted the ranking of these two cricketers on Google Search Trends.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+