Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன்.. கங்குலியை வீழ்த்தி கோலி நம்பர் 1

ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களும்,இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களையும் (டிக்ளேர்) எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Virat kohli became 2nd indian captain for most test victories

இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய மைல்கல்லை கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் அவர் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளார். இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளை பெற்றுள்ளது.

முதல் இடத்தில் 27 வெற்றிகளுடன் தோனி உள்ளார்.

அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் விவரம்

  • தோனி - 27 வெற்றிகள் (60 போட்டிகள்)
  • கோலி - 22 வெற்றிகள் (38 போட்டிகள்)
  • கங்குலி - 21 வெற்றிகள் (49 போட்டிகள்)
  • அசாருதீன் - 14 வெற்றிகள் (47 போட்டிகள்)
  • கவாஸ்கர் - 9 வெற்றிகள் (47 போட்டிகள்)
Story first published: Wednesday, August 22, 2018, 19:59 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+