Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டிகள்ல முதல் வீரரா கோலி செஞ்ச சாதனை... சர்வதேச அளவுல குவியும் பாராட்டுக்கள்

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய டி20 போட்டிகளில் 26வது அரைசதத்தை அடித்துள்ளார்.

மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்துள்ள முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்த இடையிலான டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் இஷான் கிஷன் மற்றும் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தனர். இது டி20 போட்டிகளில் கோலி அடித்துள்ள 26வது அரைசதம்.

அதிரடி 73 ரன்கள்

அதிரடி 73 ரன்கள்

இந்த போட்டியில் ஆடத்துவங்குவதற்கு முன்னதாகவே விராட் கோலியிடம் அடித்து ஆடும் தீவிரம் காணப்பட்டது. கடந்த போட்டியில் அவர் டக்-அவுட் ஆன நிலையில் நேற்றைய போட்டியில் 49 பந்துகளில் 73 ரன்களை அதிரடியாக அடித்து ஆட்டத்தை சிறப்பாக வெற்றியுடன் முடித்துக் கொடுத்துள்ளார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்கள் அடக்கம்.

முதல் வீரராக கோலி சாதனை

முதல் வீரராக கோலி சாதனை

இந்த ரன் குவிப்பு மூலம் நேற்றைய தினம் சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை குவித்துள்ள முதல் சர்வதேச வீரர் என்ற பெருமை விராட்டுக்கு கிடைத்துள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக 12,000 ரன்களை பூர்த்தி செய்தும் சாதனை மேற்கொண்டுள்ளார் விராட் கோலி.

50+ சராசரி

50+ சராசரி

3 வடிவங்களிலான போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியையும் பெற்று நேற்றைய போட்டியின்மூலம் சாதனை மேற்கொண்டுள்ளார். கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கோலி, நேற்றைய போட்டியில் ரசிகர்களுக்கு மைதானத்தில் சிறப்பான தருணங்களை பரிசளித்தார். அவரது ஆட்டத்தின்போது கூட்டத்தில் ஆரவார சத்தம் ஓயவே இல்லை.

Story first published: Monday, March 15, 2021, 12:28 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+