Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியோட வெறித்தனம்... சச்சின், பாண்டிங் சாதனையை வேகமா முறியடிச்சிருக்காரு கேப்டன்

கேன்பெரா : ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்கள் சாதனையை முறியடித்த வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

242 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்சிலும் ரிக்கி பாண்டிங் 314 போட்டிகளிலும் மேற்கொண்ட சாதனையை கோலி 242 போட்டிகளிலேயே முறியடித்துள்ளார்.

2வது போட்டியில் கோலி அபாரம்

2வது போட்டியில் கோலி அபாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 89 ரன்களை விளாசினார்.

விராட் கோலி முறியடிப்பு

விராட் கோலி முறியடிப்பு

இன்றைய 3வது மற்றும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சச்சின் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட 12,000 ரன்கள் சாதனையை எட்டியுள்ளார்.

அதிகவேக சாதனை

அதிகவேக சாதனை

அதிலும் மிகவும் குறைவான போட்டிகளில் இந்த சாதனையை மேற்கொண்ட வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்சிலும், ரிக்கி பாண்டிங் 314 போட்டிகளிலும், சங்ககாரா 336 போட்டிகளிலும் ஜெயசூர்யா 379 போட்டிகளிலும் மற்றும் ஜெயவர்த்தனே 399 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

242 போட்டிகளில் சாதனை

242 போட்டிகளில் சாதனை

இந்நிலையில் இன்றைய போட்டியில் இவர்களின் இந்த ரன் குவிப்பை வெறும் 242 போட்டிகளிலேயே விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்கள் சாதனையை முறியடித்த முதல் வீரர் என்ற பெருமை விராட்டிற்கு கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, December 2, 2020, 11:56 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+