Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பாலோயர்ஸ்.முதல் இந்தியர், கிரிக்கெட் வீரர்.விராட்டின் சூப்பர் சாதனை!

அகமதாபாத் : இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருபவர் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

மேலும் இந்த சாதனையை எட்டியுள்ள முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் கோலிக்கு கிடைத்துள்ளது.

இந்திய அணி தீவிர பயிற்சி

இந்திய அணி தீவிர பயிற்சி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவஙகவுள்ளது. இதையொட்டி இந்திய அணி அகமதாபாத்தில் பயோ பபளில் உள்ளது. போட்டியையொட்டி தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

சமூகவலைதளங்களில் மற்ற வீரர்களை காட்டிலும் மிகுந்த பரபரப்பாக செயல்பட்டுவருபவர் விராட் கோலி. இவர் மட்டுமின்றி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் போடும் பதிவுகளை கண்டு லைக் செய்வதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதல் இந்தியர் என்ற பெருமை

முதல் இந்தியர் என்ற பெருமை

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் விராட் கோலி. இதன்மூலம் இந்த எண்ணிக்கையை பெற்றுள்ள முதல் இந்தியர் மற்றும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. அவரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 60 மில்லியன் பாலோயர்களை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

மேலும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் விராட் கோலிக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதுவரை டிவிட்டரில் 40.8 மில்லியன் பாலோயர்களும் பேஸ்புக்கில் 36 மில்லியன் பாலோயர்களும் அவருக்கு உள்ளனர். இந்நிலையில் இந்த சாதனையை எட்டியுள்ள கோலிக்கு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, March 2, 2021, 12:41 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+