Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட எட்டு புள்ளிகள் அதிகம் பெற்று இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், டெஸ்ட் தரவரிசையில் தன் வாழ்நாளின் சிறந்த ரேட்டிங்கையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 97 மற்றும் 103 ரன்கள் குவித்த பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

Virat Kohli becomes No.1 test batsmen again

தற்போது 937 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் கோலி, இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு புள்ளி பெற்றால் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடுவார்.

ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருட தடை காலத்தில் இருந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பில், கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிக ரன் குவிக்க, முதல் முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.

எனினும், இரண்டாவது போட்டியில் குறைவான ரன்களை அடித்து ஒரே வாரத்தில் முதல் இடத்தை ஸ்மித்திடம் பறிகொடுத்தார். தற்போது மூன்றாவது போட்டியில் ரன் குவித்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின், இந்திய வீரர்களில் ஹர்திக் பண்டியா பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் என அனைத்து தரவரிசையிலும் நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் 23 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 27 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பண்டியா ஒரே இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள், மற்றும் 52 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும் தான் இந்த ஏற்றத்துக்கு காரணம். அதே போல, வெறும் நான்கு டெஸ்ட் ஆடிய பும்ரா தரவரிசையில் 37வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Thursday, August 23, 2018, 17:46 [IST]
Other articles published on Aug 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+