For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Virat Kohli: மரண மாஸ்..! 20 ஓவர் போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய சாதனை

பெங்களூரு: பெங்களூருவில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 17 ரன்களை கடந்த போது 20 ஓவர் போட்டியில் 8,000 ரன்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சோபிக்காமல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தவர்கள் என்ற பட்டியலில் இருப்பவர் விராட் கோலி. ஆனால்... இன்று அந்த பெயரை அழித்து மரண மாஸ் காட்டி விட்டார்.

1
45773

கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற போட்டி என்பதால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ஒரு முடிவுடன் அற்புத ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது.

MS Dhoni: இது தான் நம்ம தல... பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட தோனி... வைரல் வீடியோ MS Dhoni: இது தான் நம்ம தல... பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட தோனி... வைரல் வீடியோ

அருமையான தொடக்கம்

அருமையான தொடக்கம்

முதலில் களம் இறங்கிய அந்த அணியில் பார்த்தீவ் படேலும், கோலியும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதிலும் கோலி.. நீண்ட நாளுக்கு பிறகு தமது இன்னிங்சை விளையாடி இருக்கிறார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

தொடக்கத்தில் மிக நிதானம், விக்கெட்டுகளுக்கு இடையில் சுறுசுறுப்புடன் ஓடி... தம்மை இயல்பாக்கி கொள்வது என அருமையாக தமது ஆட்டத்தை கையாண்டார். பேட்டிங் பிட்சில் வெளுத்து வாங்கினார். 31 பந்துகளில் அவர் அரை சதத்தை எட்டினார்.

கோலி 8,000 ரன்கள்

கோலி 8,000 ரன்கள்

இன்றைய இன்னிங்சிற்கு முன்பாக 8,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்ட 17 ரன்கள் குறைவாக இருந்தார் ஆனால்... 10வது பந்தில் சாதனை மன்னன் விராட் இன்னொரு மைல்கல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

2வது வீரர் கோலி

2வது வீரர் கோலி

டி 20 ஓவர் போட்டிகளில் 8,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் 306 போட்டிகளில் 8,110 ரன்களை எடுக்க விராட் கோலி 257 போட்டிகளிலேயெ 8001 ரன்கள் என்று சாதனையை நிகழ்த்தினார்.

ரோகித், கம்பீர்

ரோகித், கம்பீர்

அவருக்கு அடுத்ததாக 8000 ரன்களை எடுக்கும் நிலையில் ரோகித் சர்மா 7,902 ரன்களில் உள்ளார். தவான் 6,548 ரன்களையும் கம்பீர் 6,402 ரன்களையும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Story first published: Friday, April 5, 2019, 21:49 [IST]
Other articles published on Apr 5, 2019
English summary
Virat Kohli becomes second Indian to 8000 T20 runs, joins Suresh Raina.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X