Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு கவுரவத்தை பெற்ற இளம் இந்திய வீரர் கோலி தான்.. டெல்லியில் கிடைத்த பெருமை!

Recommended Video

Virat kohli stand in Ferosha kotla stadium

டெல்லி : டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பார்வையாளர் பகுதிக்கு விராட் கோலி பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த பெருமையை பெற்ற இளம் இந்திய வீரர் கோலி தான். வேறு எந்த இந்திய வீரரும் இத்தனை இளம் வயதில் இந்த பெருமையை பெறவில்லை.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தின் பெயரை அருண் ஜேட்லி ஸ்டேடியம் என மாற்றும் விழாவில், கோலிக்கும் பெருமை சேர்க்கப்பட்டது.

பெரிய வளர்ச்சிக்கு காரணம்

பெரிய வளர்ச்சிக்கு காரணம்

கடந்த மாதம் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் படாவி வகித்து இருக்கிறார். அவரால் தான் அந்த மைதானம் பெரிய வளர்ச்சியை பெற்றது.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

மைதானத்தை நவீனப்படுத்தியதோடு, அதிக பார்வையாளர்கள் இருக்கையையும் உருவாக்கினார். மேலும், டெல்லியில் இருந்து பல இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

அருண் ஜேட்லி ஸ்டேடியம்

அருண் ஜேட்லி ஸ்டேடியம்

அவரை கவுரப்படுத்தும் வகையில் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த விழாவில், பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தின் பெயரை அருண் ஜேட்லி ஸ்டேடியம் என மாற்றி பெயர் சூட்டினர்.

விராட் கோலி ஸ்டாண்டு

விராட் கோலி ஸ்டாண்டு

மேலும், பெவிலியன் ஸ்டாண்டின் பெயரை "விராட் கோலி ஸ்டாண்டு" என அறிவித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலியையும் கவுரவப்படுத்தினர். இந்த பெருமையை பெறும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்.

நீண்ட நாட்கள் கழித்து..

நீண்ட நாட்கள் கழித்து..

முன்னதாக இந்த டெல்லி மைதானத்தில் பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் அமர்நாத்துக்கு ஸ்டாண்டு உள்ளது. அவர்களுக்கு அந்த கவுரவம் ஓய்வு பெற்ற பின் நீண்ட நாட்கள் கழித்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பலரும் கலந்து கொண்டவர்கள்

பலரும் கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரஜத் சர்மா, அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Story first published: Thursday, September 12, 2019, 22:19 [IST]
Other articles published on Sep 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+