Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே நாட்டிங்காமில் மறுபடியும் ஒரு "வாய்க்கால் சண்டை"!

நாட்டிங்காம்: எந்த நாட்டிங்காம் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கும், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே சண்டை நடந்ததோ, அதே நாட்டிங்காமில் மீண்டும் ஒரு இந்திய, இங்கிலாந்து வாய்ச் சண்டை நடந்துள்ளது.

இந்த முறை இந்தியத் தரப்பில் சிலிர்த்தவர் விராத் கோஹ்லி. இங்கிலாந்து தரப்பில் சண்டையில் ஈடுபட்டவர் வேகப் பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ்.

நாட்டிங்காமில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியின்போது இருவரும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதைதா் தொடர்ந்து நடுவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் போட்டி தொடர்ந்து நடந்தது.

26வது ஓவரில்

26வது ஓவரில்

அது இந்தியாவின் 26வது ஓவர். விராத் கோஹ்லி பேட் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டோக்ஸ் பந்து வீசினார். அப்போது கோஹ்லி அவுட்டாகி விட்டார். அவர் எடுத்திருந்த ரன்கள் 40.

சும்மா இருக்காத ஸ்டோக்ஸ்

சும்மா இருக்காத ஸ்டோக்ஸ்

அவுட் ஆனதைத் தொடர்ந்து கோஹ்லி பெவிலியனுக்குத் திரும்பத் தொடங்கினார். அப்போது ஸ்டோக்ஸ் கோஹ்லியைப் பார்த்து ஏதோ சொன்னார். இதைக் கேட்டதும் கோபமடைந்த கோஹ்லி அப்படியே நின்றார். பின்னர் தனது பேட்டை ஸ்டோக்ஸை நோக்கி உயர்த்தி சில நிமிடங்கள் முறைத்துப் பார்த்தார். அவரும் ஸ்டோக்ஸை நோக்கி ஏதோ சொன்னார்.

கோபத்துடன் நடை

கோபத்துடன் நடை

இதையடுத்து நடுவர்கள் குறுக்கிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினர். பின்னர் கோஹ்லி திரும்பிச் சென்றார். ஆனால் அவர் சென்ற விதத்திலேயே, ஸ்டோஸ்க் சொன்னது அவரை டென்ஷன்படுத்தியிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இங்கிலாந்து கேப்டனுக்கு நடுவர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்து கேப்டனுக்கு நடுவர்கள் எச்சரிக்கை

இந்த சம்பவத்திற்குப் பின்னர் இரு நடுவர்களும், இங்கிலாந்து கேப்டன் குக் மற்றும் ஸ்டோக்ஸை அழைத்து சில வார்த்தைகளைக் கூறி எச்சரித்தனர். பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.

ஸ்டோக்ஸ் மீதுதான் தவறு

ஸ்டோக்ஸ் மீதுதான் தவறு

இந்த விவகாரத்தில் ஸ்டோக்ஸ் மீதுதான் தவறு இருப்பது டிவி காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. அவர்தான் எதையோ பேசி கோஹ்லியை வம்பிக்கிழுத்தார். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.

அடித்து நொறுக்கிய இந்தியா

அடித்து நொறுக்கிய இந்தியா

இப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவைத்துக் காயப்போட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, September 1, 2014, 16:23 [IST]
Other articles published on Sep 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+