Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் போட்டின்னாலே விராட் தான் பெஸ்ட்... அதுல சந்தேகம் என்ன.. ஸ்டீவ் ஸ்மித்

லண்டன் : ஒருநாள் போட்டிகளில் தற்போது சிறப்பான பேட்ஸ்மேனாக இந்திய கேப்டன் விராட் கோலி திகழ்வதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று துவங்கவுள்ளது. இதற்கென இங்கிலாந்தில் உள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஸ்டீவ் ஸ்மித் லைவ் சாட்

ஸ்டீவ் ஸ்மித் லைவ் சாட்

இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் ஆஸ்திரேலிய ரன் மெஷினாக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அங்கு சென்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

விராட் தான் பெஸ்ட்

விராட் தான் பெஸ்ட்

ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது பெஸ்ட் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித் சந்தேகமே இல்லாமல் இந்திய கேப்டன் விராட் கோலிதான் என்று தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 11,867 ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி. மேலும் 43 சதங்களையும் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையான 50 சதங்களை முறியடிக்க அவருக்கு இன்னும் 7 சதங்களே தேவைப்படுகின்றன.

ராகுல், சாம்சனின் ஆட்டத்தை பார்க்க ஆவல்

ராகுல், சாம்சனின் ஆட்டத்தை பார்க்க ஆவல்

இந்த ஐபிஎல் சீசனில் கே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டங்களை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தன்னுடன் விளையாடவுள்ள ஜோஸ் பட்லர், மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் தற்போது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்றும் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று துவக்கம்

இன்று துவக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக தற்போது இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று துவங்கவுள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், இதையடுத்தே ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய அணியான ராஜஸ்தான் ராயல்சில் ஸ்டீவ் ஸ்மித் இணைவார்.

Story first published: Friday, September 11, 2020, 17:08 [IST]
Other articles published on Sep 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+