Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோலியே பெஸ்ட்".. பொங்கிய தோனி ஃபேன்ஸ்.. அடுத்த வார்த்தையில் "கூல்" செய்த வாகன்

இங்கிலாந்து: தோனியை விட கோலி சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று கூறி, தோனி ரசிகர்களின் பொல்லாப்புக்கு ஆளாகும் அதே நேரத்தில், ஒரு பெரிய ஐஸ் மலையை தூக்கி அவர்கள் தலையில் வைத்திருக்கிறார் மைக்கேல் வாகன்.

இந்த உலகத்தில் 'கம்பேரிசன்' என்பது தவிர்க்க முடியாதது. அது ஒரு மன நோய். ஆனால், கல்வியில் தொடங்கி விளையாட்டு வரை கம்பேரிசன் இன்றி எதுவும் கிடையாது.

அதிலும், இந்திய கிரிக்கெட் எல்லாத்துக்கும் ஒருபடி மேல். கவாஸ்கர் - சச்சின், கோலி - சச்சின், கோலி - தோனி, சச்சின் - தோனி என்று வித விதமாக ரகமாக கம்பேரிசன் இருக்கும்.

மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் இந்த கம்பேரிசன் ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பியுள்ளது. அவர் கூறுகிறார், "தோனியை ஒப்பிடும் போது, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் தான். ஆனால், டி20-ஐ பொறுத்தவரை தலைசிறந்த கேப்டன் என்றால் அது தோனி மட்டும் தான். இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. விராட் டெஸ்ட்டின் சிறந்த கேப்டனாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தோனியே பெஸ்ட்" என்கிறார்.

டி20-ல் தோனி மாஸ்

டி20-ல் தோனி மாஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியும், கோலியும் இதுவரை தலா 60 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளனர். இதில், தோனி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 15 டிராவும், 18 தோல்விகளையும் சந்தித்து இருக்கிறார். ஆனால், கோலி 36 டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறார். 10 டிரா, 1 தோல்வி. கோலியின் வெற்றி சதவிகிதம் 60. தோனியின் வெற்றி சதவிகிதம் 45.

சிஎஸ்கே தல

சிஎஸ்கே தல

எனினும், டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலியாவில் முதல் ஒருநாள் தொடர் கோப்பை என்று தோனி வசமிடம் உள்ள கோப்பைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மூன்று கோப்பைகளை வென்ற தோனி, இந்தாண்டுக்கான தொடரிலும் கோப்பையை குறி வைத்து செமத்தியாக அணியை வழிநடத்தி வருகிறார்.

இரு கண்கள்

இரு கண்கள்

இந்த நிலையில் தான், வீட்டில் சும்மா இருக்க முடியாமல் மைக்கேல் வாகன் பற்றவைக்க, சமூக தளங்களில் கோலி - தோனி ரசிகர்கள் முண்டியடித்து அவருக்கு பதில் அளித்து வருகின்றனர். இதில். தோனிக்கு ஆதரவாக தமிழக ரசிகர்களும் கோதாவில் குதிக்க, அதிர்கிறது சோஷியல் மீடியாக்கள். எது எப்படி இருந்தாலும், தோனியும், கோலியும் இந்திய கிரிக்கெட்டின் இரு கண்கள் என்றால் அது மிகையாகாது.

Story first published: Saturday, May 29, 2021, 19:09 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+