Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் ஜாம்பவான்.. சச்சினுக்கு அடுத்து இவர்தான்.. ஹேப்பி பர்த்டே விராட் கோலி

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் ஜாம்பவான் ஆன விராட் கோலிக்கு இன்று 36 வயது ஆகிறது. இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் விராட் கோலி அசுர வளர்ச்சி அடைந்தார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எந்த வீரராலும் முறியடிக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், சச்சினின் சில சாதனைகளை விராட் கோலி அசாதாரணமாக முறியடித்தார். குறிப்பாக ஒரு நாள் தொடரில் 50 சதங்கள் அடித்து இருந்த சச்சினின் சாதனையை விராட் கோலி மிகக் குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முறியடித்தார்.

virat kohli india

15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற வீரராகவும் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அவர் சரிவை சந்தித்து இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.

இந்திய அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 254 ரன்கள் அடித்து இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 47.83 ஆக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் மற்றும் 31 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

295 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி அதில் 13,906 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 183 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது ஒரு நாள் போட்டி சராசரி 58.18 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் 50 சதம் மற்றும் 72 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் கோலி, அதில் 4,188 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சர்வதேச டி20 சராசரி 48.69 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 137.04 ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 38 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். அவர் 2024 டி20 உலகக் கோப்பை வென்றதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோலி!

Story first published: Tuesday, November 5, 2024, 8:32 [IST]
Other articles published on Nov 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+