For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

HBD Kohli - வயது வாரியாக கோலி அடைந்த தரவரிசை பட்டியல் உயரம்.. இதை பார்த்தாலே, அவர் வளர்ச்சி தெரியும்

கொல்கத்தா : கடின உழைப்பும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தால் நாம் நினைத்ததை அடையலாம் என்பதற்கு விராட் கோலி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தன்னுடைய 19 ஆவது வயதில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து தற்போது உலகில் முன்னணி வீரர்களின் ஒருவராக விளங்குகிறார்.

விராட் கோலியின் அடையாளம் கிரிக்கெட் என்று இருந்த நிலை மாறி தற்போது கிரிக்கெட்டின் அடையாளம் விராட் கோலி என்ற உயரத்திற்கு சென்று விட்டார். விராட் கோலியின் பல சாதனைகளை சிறு குழந்தைகளிடம் கேட்டாலே தெரியும்.

Virat kohli birthday special - see how kohli raised in his ranking during every year

ஆனால் உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம். அதாவது விராட் கோலி தன்னுடைய ஒவ்வொரு வயதிலும் தரவரிசை பட்டியலில் எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்பதை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம். இதை பார்த்தாலே விராட் கோலி ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்பது தெரியும்.

விராட் கோலி தன்னுடைய 20வது வயதில் சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசை பட்டியலில் 98 வது இடத்தில் இருந்தார். தன்னுடைய 21 வது வயதில் விராட் கோலி 73 ஆம் இடத்திற்கு தரவரிசை பட்டியலில் உயர்ந்தார். விராட் கோலி 22 ஆவது வயதில் 73 வது இடத்தில் இருந்து 15 வது இடத்திற்கு வந்தார். தன்னுடைய 23 வது வயதில் டாப் 10க்குள் வந்த விராட் கோலி தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்தார்.

விராட் கோலி தன்னுடைய 24 வது வயதில் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். தன்னுடைய 25 ஆவது வயதில் எல்லாம் விராட் கோலி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் வீரராக உயர்ந்தார். 26 ஆவது வயதில் மூன்றாவது இடத்திலும், 27 வது வயதில் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திலும், 28 வது வயதில் மீண்டும் இரண்டாவது இடத்திலும் இருந்த விராட் கோலி தன்னுடைய 29 வது வயதில் மீண்டும் நம்பர் ஒன் வீரராக இருந்தார்.

முதல் இடத்திற்கு வருவது பெரிதல்ல ஆனால் தொடர்ந்து முதல் வீரராக இருப்பதுதான் கடினம் என்று சொல்வார்கள். ஆனால் விராட் கோலி தன்னுடைய 29, 30, 31, 32 ஆகிய வயதுகளில் தொடர்ந்து தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் வீரராகவே இருந்தார். இதைத் தொடர்ந்து 33 வது வயதில் விராட் கோலி இரண்டாவது இடத்தை தரவரிசை பட்டியலில் அடைந்தார். அனைவரின் வாழ்க்கையிலும் சரிவு வரும், அதைப்போல் விராட் கோலியின் வாழ்க்கையிலும் சரிவு வந்தது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதை தற்போது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் இருந்து விராட் கோலி அதன் பிறகு 15 இடங்கள் கீழ் சரிந்து சென்றார். ஆனால் தற்போது 34 மற்றும் 35 வது வயதில் மீண்டும் விராட் கோலி தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் வந்து ஏழாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு முடிவதற்குள் விராட் கோலி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார்.

Story first published: Sunday, November 5, 2023, 5:20 [IST]
Other articles published on Nov 5, 2023
English summary
Virat kohli birthday special - see how kohli raised in his ranking during every year HBD Kohli - வயது வாரியாக கோலி அடைந்த தரவரிசை பட்டியல் உயரம்.. இதை பார்த்தாலே, அவர் வளர்ச்சி தெரியும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+