
ஆர்சிபி மோசமான தோல்வி
ஐபிஎல்லின் 52வது லீக் போட்டி நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் அந்த அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

4வது இடத்திற்கு சன்ரைசர்ஸ் முன்னேற்றம்
அடுத்ததாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி இந்த இலக்கை 14.1 ஓவர்களிலேயே பூர்த்தி செய்து வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அந்த அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாறாக ஆர்சிபி 2வது இடத்தில் இருந்தாலும் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேற அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இறுதி லீக் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

விராட் கோலி குற்றச்சாட்டு
இந்நிலையில், தங்களின் பேட்ஸ்மேன்கள் துணிச்சலாக அடித்து ஆடாததே தோல்விக்கு காரணம் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார். குறைந்தபட்சம் 140 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் 120 ரன்களிலேயே ஆட்டத்தை முடித்ததால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிட்சை சரியாக பயன்படுத்தினர்
ஆனால் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடியதாகவும் பிட்சையும் சிறப்பாக பயன்படுத்தியதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் டாஸ் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் சிறப்பாக கணித்து விளையாடியதாகவும் அதை தாங்கள் செய்ய தவறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications