Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்காவுக்கு "பிளையிங் கிஸ்" கொடுத்த கோஹ்லி.. சீண்டிப் பார்த்த ஜான்சனுக்கும் ஒன்னு!!

மெல்போர்ன்: முதலில் ரன்கள்.. அடுத்து ஜில் ஜில் முத்தங்கள்.. 3வது டெஸ்ட் போட்டியில் இ்ந்தியாவின் ஹீரோவாக திகழ்ந்து வரும் விராத் கோஹ்லியின் நாளாக மாறிப் போனது நேற்றைய 3வது நாள் ஆட்டம்.

3வது நாள் ஆட்டத்தில் விராத் கோஹ்லி பிரமாதமாக ஆடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கண்களில் பேட்டை விட்டு ஆட்டி விட்டார். அபாரமாக ஆடிய அவர் 169 ரன்களைக் குவித்தார்.

இத்தனைக்கும் வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், கோஹ்லியை பல விதங்களிலும் சீண்டியபடியே இருந்தார். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனது பேட்டால் ஜான்சனுக்கு செமத்தியான பாடம் கற்பித்தார் கோஹ்லி.

3வது சதம்

3வது சதம்

இந்த தொடரில் கோஹ்லி விளாசிய 3வது சதமாகும் இது. சிறப்பான பார்மில் உள்ள கோஹ்லியை, ஜான்சன் பலமுறை சீண்டியபோதும் அது அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடி 169 ரன்களைக் குவித்தார் கோஹ்லி.

வார்த்தைப் போர்

வார்த்தைப் போர்

கோஹ்லி சதம் அடிக்க சில ரன்களே தேவைப்பட்ட நிலையில் அவரை கடுமையாக சீண்டிப் பார்த்தார் ஜான்சன். இதனால் கோபமடைந்த கோஹ்லி, ஜான்சனைப் பிடித்து திட்டி விட்டார். பதிலுக்கு ஜான்சனும் திட்ட சூடாகிப் போனது ஏரியா. இருப்பினும் ரசாபாசமாக எதுவும் நடக்கவில்லை.

சதம் போட்டதும் கிஸ்ஸோ கிஸ்ஸு...!

சதம் போட்டதும் கிஸ்ஸோ கிஸ்ஸு...!

ஒரு வழியாக சதம் போட்டதும், கோஹ்லி உற்சாகத்துடன் கைகளை உயர்த்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தனது பேட்டை பார்வையாளர் மாடத்தில் இருந்த காதலி அனுஷ்கா சர்மாவை நோக்கி நீட்டி பேட் வழியாக பறக்கும் முத்தங்களை சரமாரியாக அனுப்பினார். இதைப் பார்த்து அனுஷ்காவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.

முதல் முத்தம் அல்ல

முதல் முத்தம் அல்ல

அனுஷ்காவுக்கு பேட் வழியாக கோஹ்லி முத்தங்களை பார்சல் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஒன்றிலும் சதம் போட்டபோது இப்படித்தான் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

150 ரன்களை எட்டியதும்

150 ரன்களை எட்டியதும்

அதேபோல கோங்லி 150 ரன்களை எட்டியதும் அனுஷ்கா சர்மா எழுந்து நின்று கைகளைத் தட்டி சந்தோஷக் கூச்சலிட்டபடி கோஹ்லியை வாழ்த்தினார்.

இந்தா பிடி உனக்கும் முத்தம்!

இந்தா பிடி உனக்கும் முத்தம்!

அனுஷ்காவுக்கு முத்தம் கொடுத்த வாயோடு, அப்படியே இன்னொரு பக்கம் திரும்பி அங்கிருந்த இன்னொரு நபருக்கும் பறக்கும் முத்தம் கொடுத்தார் கோஹ்லி. அது பெண் அல்ல.. மாறாக தன்னை தொடர்நது சீண்டியபடி இருந்த மிட்சல் ஜான்சனுக்குத்தான் இந்த முத்தம். இது மைதானத்தில் சிரிப்பலைகளை கிளப்பி விட்டது.

அனுஷ்காவுக்கு பொறாமை வரும்.. ஹெய்டன்!

அனுஷ்காவுக்கு பொறாமை வரும்.. ஹெய்டன்!

இதைப் பார்த்து கமெண்டரி பாக்ஸில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன், இதைப் பார்த்து அனுஷ்கா பொறாமைப்படப் போகிறார் என்று சிரித்தபடி கூறினார்.

கோஹ்லியைக் காப்பாத்திய அனுஷ்கா

கோஹ்லியைக் காப்பாத்திய அனுஷ்கா

இதே அனுஷ்காவால்தான் இங்கிலாந்து தொடரில் கோஹ்லி சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் அந்த அவப் பெயர் போய் விட்டது. ஆஸ்திரேலிய தொடரில் கோஹ்லி பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 29, 2014, 11:49 [IST]
Other articles published on Dec 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+