Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரட்டிய புவனேஷ்வர் குமார்... தலைவணங்கிய கோஹ்லி... வைரல் ஆகும் வீடியோ!

மும்பை: நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வான்கடே மைதானத்தில் தொடர்ந்து சில சிக்ஸர்களை அடித்த இந்திய பவுலர் புவனேஷ்வர் குமாரை கேப்டன் கோஹ்லி பாராட்டினார். மிகவும் கடினமான சூழ்நிலையில் புவனேஷ் குமார் அடித்த சிக்ஸர்கள் மிகவும் உதவியாக இருந்தது.

இந்த மேட்ச்சில் புவனேஷ்வர் குமார் 26 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். கடைசி நேரத்தில் அவர் இப்படி விளையாடியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

புவனேஷ்வர் குமார் விளையாடியதை பார்த்து கோஹ்லி தலைவணங்கும் வீடியோ வெளியாகி தற்போது வைரல் ஆகியுள்ளது. அவரின் செய்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 நியூசிலாந்து அணி முன்னிலை

நியூசிலாந்து அணி முன்னிலை

நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு, இந்தியாவுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 281 ரன் இலக்கை நியூசிலாந்து அணி மிக எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 சரியாக ஆடாத பேட்ஸ்மேன்கள்

சரியாக ஆடாத பேட்ஸ்மேன்கள்

இந்த நிலையில் நேற்று இந்திய அணி முதலில் ஆடிய போது பேட்டிங்கில் அதிகம் சொதப்பியது. சிறப்பாக செய்லபடுவார்கள் என நம்பப்பட்ட அனைவரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மிகவும் சிறப்பாக விளையாடினார். இரண்டு சிக்ஸ் இரண்டு ஃபோருடன் இவர் 26 ரன்கள் அடித்தார்.

 சிக்ஸ்கள் பறக்க விட்ட புவனேஷ்வர் குமார்

சிக்ஸ்கள் பறக்க விட்ட புவனேஷ்வர் குமார்

நியூசிலாந்து பவுலர் ஆடமின் ஓவரை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார், அவரது கடினமான பவுன்சரில் சிக்ஸர் அடித்தார். இந்த சிக்ஸர் அதிக தூரம் சென்ற கூட்டத்தில் இருந்த மக்களிடம் விழுந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் புவனேஷ்வர் குமார் அடித்த அந்த சிக்ஸ் மிகவும் உதவியாக இருந்தது. இவரின் சிக்ஸரை அடுத்து மொத்த மும்பை கூட்டமும் ஆர்ப்பரித்தது.

கோஹ்லி பாராட்டும் வீடியோ

இந்த நிலையில் இந்த சிக்ஸை பார்த்த கோஹ்லி உடனே புவனேஷ்வர்குமாரை தலைவணங்கி பாராட்டினார். தற்போது இது வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மிகவும் அதிக அளவில் பரப்பப்பட்டு வைரல் ஆகி வருகிறது. கோஹ்லியின் இந்த செய்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, October 23, 2017, 12:51 [IST]
Other articles published on Oct 23, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+