Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் பௌலிங் போடறதை பார்த்து சிரிச்சாலும் பரவாயில்லை.. பயிற்சியில் பந்து வீசிய கோலி

சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் கோலி இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். கோலி சமீப காலங்களில் பந்துவீசுவது மிகவும் குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் உள்ள பந்துவீச்சாளர்கள்

அனுபவம் உள்ள பந்துவீச்சாளர்கள்

ஷமி, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா என சர்வதேச அனுபவம் உள்ள பந்துவீச்சாளர்கள் ஐந்து பேர் இருந்தும் கத்துக்குட்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா ரன்கள்

இந்தியா ரன்கள்

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மூன்றாம் நாள் முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தற்போது வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே பின்தங்கி 356 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருக்கிறது.

கட்டுப்பாடோடு வீசிய அஸ்வின்

கட்டுப்பாடோடு வீசிய அஸ்வின்

இந்திய அணியில் ஷமி மட்டுமே 3 விக்கெட்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். எனினும், ஓவருக்கு 3.72 ரன்கள் கொடுத்தார் ஷமி. உமேஷ், அஸ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் விக்கெட் எடுக்கவில்லை. ரன் கொடுப்பதில் அஸ்வின் மட்டுமே கட்டுப்பாடோடு இருந்தார். அவர் ஓவருக்கு 2.63 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், அவரும் கத்துக்குட்டி வீரர்களை அச்சுறுத்தவில்லை.

கோலி 2 ஓவர்கள் வீசினார்

கோலி 2 ஓவர்கள் வீசினார்

இந்த நிலையில் கோலி 2 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எடுக்க முயற்சித்தார். கோலி 2 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டும் கொடுத்தார். விக்கெட்கள் விழவில்லை. நீண்ட காலமாக பந்து வீசாமல் இருந்து வந்த கோலி இன்று பந்து வீசியுள்ளார்.

கோலி வீசினால் சிரிப்பார்கள்

கோலி வீசினால் சிரிப்பார்கள்

கோலி 2016இல் பிசிசிஐ-க்குஅளித்த பேட்டியில் இது பற்றி கூறியுள்ளார். இந்திய அணி வீரர்கள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கோலி பந்தை கையில் எடுத்து பந்துவீச தயாரானால், முகத்தை திருப்பிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருப்பார்கள் என அந்த பேட்டியில் கூறியுள்ளார். இப்படி சிரிக்கக் காரணம் கோலியின் சிரிப்பை வரவழைக்கும் பந்துவீச்சு முறை தான். கோலி ஓடி வருவதும், பந்துவீச காலை நகர்த்தி வைப்பதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

அணி தான் முக்கியம்

அணி தான் முக்கியம்

ஆனால், யார் என்ன நினைத்தாலும் அணிக்கு தேவை என்றால் அது தான் முக்கியம் என கூறி இருந்தார். அதே போல, இன்று கத்துக்குட்டி அணிக்கு எதிராகவே இந்திய பந்துவீச்சு ஆட்டம் கண்டவுடன் கோலி பந்தை கையில் எடுத்து விட்டார்.

Story first published: Friday, November 30, 2018, 18:36 [IST]
Other articles published on Nov 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+