Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதல் மனைவியின் அழகான புகைப்படம்... காதல் மெசேஜ் அனுப்பிய விராட்

மும்பை : அனுஷ்கா சர்மா மும்பையில் தன்னுடைய பிளாட்டில் காலை வேளையில் சூரிய ஒளிக்கு இடையில் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூரிய ஒளி அனைத்தும் இந்த இடத்தில் நின்று செல்லும் என்னும்படியாக அந்த புகைப்படத்திற்கு அவர் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன அவரது கணவரும் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, அந்த புகைப்படத்திற்கு காதல் எமோஜியை பரிசளித்துள்ளார்.

ஆதர்ச தம்பதி

ஆதர்ச தம்பதி

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஆதர்ச தம்பதியாக விளங்குகின்றனர். இவர்களின் அன்பு, காதல் எப்போதும் குறையாமல் காணப்படுகிறது. இது மட்டுமின்றி, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது சமூக அக்கறையையும் இவர்கள் வெளியிட்டு வருகின்றனர். இவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் சமூக வலைளதங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தைரியத்தை பின்பற்ற முயற்சி

தைரியத்தை பின்பற்ற முயற்சி

சமீபத்தில்கூட ரவிசந்திரன் அஸ்வினுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் அனுஷ்கா சர்மா குறித்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருந்தார் கோலி. மேலும் அவர் மிகவும் தைரியசாலி என்றும் அவரிடம் இருந்து தான் அந்த குணத்தை பின்பற்றி வருவதாகவும் கோலி தெரிவித்திருந்தார். ஒரு விஷயத்தில் அனுஷ்கா நம்பிக்கை வைத்துவிட்டால், அதை சிறப்பாக முடித்துவிட்டுதான் மற்ற வேலையை பார்ப்பார் என்றும் கூறியிருந்தார்.

காதல் எமோஜி பரிசு

காதல் எமோஜி பரிசு

இந்நிலையில், தன்னுடைய மும்பை பிளாட்டில் காலை வேளையில் சூரிய ஒளி தன்மீது படும்படியான புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா, அழகான இந்த புகைப்படத்திற்கு விராட் கோலி காதல் எமோஜியை பரிசளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை விட இவர்களின் அன்பின் வெளிப்பாடும் மிகவும் அழகாக இருந்தது.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களை குஷியாக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் டைனோசர் வாக் செய்து விராட் கோலி அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவுடம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

Story first published: Sunday, June 7, 2020, 12:47 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+